எம்பிபிஎஸ்: பிசி-எம்பிசி மாணவர்களுக்கு 693 சீட்கள் கிடைக்க வாய்ப்பு
சென்னை:
எம்பிபிஎஸ் உத்தேச கட் ஆப் மார்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள. இதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த மாணவர்களில் 282 மார்க் வரை பெற்றவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கு இடம் கிடைக்க வாய்ப்புஉள்ளது.
இந்த ஆண்டு பிளஸ்டு டூ மதிப்பெண்களை மட்டுமே வைத்து மாணவ, மாணவிகள் தொழிற் கல்லூரிகளில்சேர்க்கப்படவுள்ளனர்.இதன்படி எம்பிபிஎஸ் ரேங்க் பட்டில் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாணவி சந்தியாசுரேஷ் 300க்கு 299.25 மார்க்கு வாங்கி முதலிடத்தை பெற்றார். இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.
பொதுப் பிரிவு ரேங்க் பட்டியலில் முதல் 50 இடங்களில் 32 இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்பிடித்துள்ளனர். 10 பேர் மட்டுமே பொதுப் பிரிவினர் (ஒ.சி- அதர் கிளாஸஸ்). 7 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பை (எம்பிசி) சேர்ந்தவர்கள். ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.
அதுபோல ரேங்க் பட்டியலில் முதல் ஆயிரம் பேரில் 635 பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். பிசி வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பொதுப் போட்டி ரேங்கில்வந்துள்ளதால் ஓ.சி பிரிவு மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் சீட்டுகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிசி வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பொதுப் போட்டியிலே சீட் கிடைக்கவுள்ளதால் அந்த வகுப்பில்ரேங்க் குறைவாக பெற்றவர்களுக்கும் சீட்டு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே உத்தேச கட் ஆப் மார்க் பட்டியலை சமூக வாரியாக மருத்துவக் கல்வி இயக்குனராகம்வெளியிட்டது.
எனினும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைத்த பிறகே கட் ஆப் மார்க் பற்றிய விவரம்துல்லியமாக தெரிய வரும். உத்தேச கட் ஆப் மார்க் பட்டியல் விவரம்:
பொதுப் பிரிவினருக்கு 291, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 282, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 271,தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 262, பழங்குடியினருக்கு 239.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 1,545 சீட்டுகள் உள்ளன. இதில் 187 இடங்கள் அகிலஇந்திய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும். தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைக்கப் பொற்றால் கூடுதலாக100 சீட்டுகள் வரும். எனவே மீதியுள்ள இடங்கள் 1,358 ஆகும்.
அரசு மற்றும் போக்குவரத்து துறைக்குச் சொந்தமான ஈரோடு பெருந்துறை ஐஆர்டி மருத்துவக் கல்லூரியில் அரசுஒதுக்கீட்டுக்கு 36 இடங்கள் கிடைக்கும். இதையும் சேர்த்தால் மொத்த சீட்டுகளின் எண்ணிக்கை 1,394 ஆகஇருக்கும்.
இதில் சிறப்பு ஒதுக்கீட்டின்படி விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 3 இடங்களும், முன்னாள்ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 2 சீட்டுகளும், விளையாட்டு வீரர்களின் குழந்தைகளுக்கு 3 இடங்களும், உடல்ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீத இடங்களும் ஒதுக்கப்படும்.
சமூகரீதியில் பிற்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீத இடங்களும், எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இடங்களும்,எஸ்சி வகுப்பினருக்கு 18 சதவீதமும், எஸ்டி பிரிவினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு செய்யப்படும்.
இதன்படி பிற்பட்ட வகுப்பினருக்கு 416 இடங்களும், எம்பிசி வகுப்பினருக்கு 277 இடங்களும், எஸ்சிபிரிவினருக்கு 249 இடங்களும், எஸ்டி வகுப்பினருக்கு 14 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
மொத்தமுள்ள எம்பிபிஎஸ் சீட்டுகளின் எண்ணிக்கை மற்றும் சமூக நிலை அடிப்படையில் ரேங்க் வரிசைப்படிமாணவ, மாணவிகள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்டுவார்கள்.
இந்த கவுன்சலிங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடத்தப்படும்.இதில் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை மாணவ, மாணவிகள் தேர்வு செய்வார்கள்.
ஜூலை மாதம் 6ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலிங்தொடங்க கால தாமதம் ஆகலாம்.
கடந்த ஆண்டு பழைய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுடன் இந்தஆண்டு புதிய பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களுடன் சேர்த்து எம்பிபிஎஸ் அட்மிஷன்போடக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிளஸ் 2 மார்க்கு மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் ரேங்க் பட்டியலையும், நுழைவுத்தேர்வுமதிப்பெண்ணை வைத்து மட்டும் தயாரிக்கப்பட்ட ரேங்க பட்டியலையும் அரசிடம் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
முதலாவது முறையில் அட்மிஷன் செய்தால் தேர்வும் மாணவர்களின் பின்னணியையும், அதுபோல இரண்டாவதுமுறையைப் பின்பற்றினால் இடம்பெறும் மாணவர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வதற்காக இந்தஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பிறகுதான் கவுன்சிலிங் தேதி முடிவு செய்யப்படும்என்று மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications