மீனாட்சி: தொடரும் மர்ம முடிச்சுகள்
கரூர்:
ஆசிரியையின் மீனாட்சியின் எலும்புக் கூடு வாழைத் தோட்டத்தில் 22ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டதாகத்தெரிகிறது. ஆனால், 26ம் தேதிதான் போலீசுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. இதனால் இடையில் நடந்த மர்மங்கள்என்ன என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இரு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மீனாட்சி எலும்புக் கூடாககண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் கிடைத்தது மீனாட்சியின் எலும்புக் கூடு தானா என்றும் சந்தேகம்கிளப்பட்டுள்ளது. சென்னையில் மரபணு சோதனை நடத்த எலும்புக் கூடு அனுப்பப்பட்டுள்ளது. இந்தசோதனைக்குப் பிறகே அது மீனாட்சியின் எலும்புக் கூடா என்பது உறுதியாகும்.இந் நிலையில் எலும்புக் கூடு கண்டு பிடிக்கப்பட்டதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி வாழைத்தோட்டத்தை தோண்டும் போது எலும்பு கூடு தென்பட்டதாக போலீசில் முதலில் கூறப்பட்டது. அதுஉண்மையல்ல என்று இப்போது தெரியவந்துள்ளது. எலும்புக் கூட்டை முதலில் பார்த்தவர் சரவணன் என்றதொழிலாளி.
அவரிடமும், தோட்டத்தில் அவருடன் வேலை செய்த மேலும் 11 பேரிடமும் சிபிசிஐடி டிஎஸ்பி சந்தானம்விசாரணை நடத்தி வருகிறார். அதில் 22ம் தேதியே எலும்பு கூட்டை பார்த்தாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால்விஏஓவுக்கு 26ம் தேதி மாலைதான் தகவல் தரப்படுள்ளது. அதன் பிறகு போலீசுக்கு அவர்கள் தகவல் தந்துள்ளார்.
எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தின் உரிமையாளர் ராமசாமி செட்டியார், இவர் சந்திரன் என்பவருக்குநிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். 2 மாதத்துக்கு முன்பு குத்தகை காலம் முடிந்து ராமசாமி செட்டியாரிடம்நிலத்தை சந்திரன் ஒப்படைத்துள்ளார்.
மீனாட்சி கணவர் ஜோதி ராமலிங்கத்தின் உறவினர்தான் சந்திரன். எனவே ராமசாமியிடமும் சந்திரனிடமும்டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
மீனாட்சி கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஜோதி ராமலிங்கம் மற்றும் குடும்பத்தினரிடம் ஆர்டிஓகணேஷ் விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து கணேஷ் கூறுகையில், மீனாட்சிக்கு நெருக்கமானவர்களேஅவரை கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.
இதற்கிடையில் போலீசார் என்னையே சுற்றிச் சுற்றி வருகின்றனர் என்று ஆசிரியை மீனாட்சியின் கணவர் ஜோதிராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,
இப்போது நடக்கும் போலீஸ் விசாரணையில் எனக்கு திருப்தி இல்லை. போலீசார் என்னையே சுற்றிச் சுற்றிவருகின்றனர். இதனால் என்னுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை.போலீசார் என்னை விட்டு விட்டு உண்மையான குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். மீனாட்சி வேலைபார்த்த பள்ளியில் படித்து வரும் மாணவி கெளரி குறிப்பிட்ட இடத்தில்தான் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்றார்.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன்,உறவினர் ரங்கநாதன் ஆகியோர் மீது சந்தேகம் இருந்து வருகிறது.
இந் நிலையில் டி.எஸ்.பி. புவனேஸ்வரி தலைமையிலான போலீஸ் படை பாப்பாசுந்தரம், அவரது மகன் கருணாகரன், ஆகியோரிடம் வலையப்பட்டியில் உள்ளஅவர்களது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.
மீனாட்சி வேலை பார்த்தபோது அங்கு படித்த மாணவிகளிடம் போலீஸார் விசாரணைநடத்தியுள்ளனர். எலும்புக் கூட்டில் நகைகள் எதுவும் இல்லாததால் நகைக்காக இந்தக்கொலை நடந்ததா என்ற கோணத்திலும் பழைய குற்றவாளிகளிடமும் போலீஸார்விசாரணை நடத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications