அரிசியுடன் சோப்பு, சீப்பு, ஆணுறை வாங்க வற்புறுத்தும் ரேஷன் கடைகள்!
சென்னை:
ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும்போது கட்டாயமாக சோப்பு, சீப்பு, டீத் தூள்ஆகியவற்றை வாங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.கடந்த அதிமுக ஆட்சியில், ரேஷன் கடைகள் மூலம் சோப்பு, சீப்பு, டீத்துள்,ஆணுறைகள் உள்ளிட்டவையும் சேர்த்து விற்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
ரேஷன் கடை ஊழியர்கள் எப்படியாவது இந்த பொருட்களை விற்று விட வேண்டும்என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் மக்கள் அவற்றைதிணித்தார்கள்.
எந்தப் பொருள் வாங்கினாலும் கூடவே சோப்பு, டீத்தூள் உள்ளிட்டவற்றையும்கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களைவற்புறுத்தி வந்தனர்.
சில கடைகளில் பெண்களிடம் ஆணுறைகளை வாங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள்வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இந் நிலையில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. எந்தப் பொருள் வாங்கினாலும்சோப்பு, டீத்தூள், சீப்பு உள்ளிட்டவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றுதொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்தி வருகிறார்கள் என புகார்எழுந்துள்ளது.
மேலும் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டம் அறிகப்படுத்தப்பட்டபின்னர் இந்த கட்டாய விற்பனை அதிகரித்துள்ளதாம்.
இவற்றை வாங்கினால்தான் அரிசி என்று ரேஷன் கடை ஊழியர்கள் நிர்ப்பந்திப்பதால்வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பொதுமக்கள் கடும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந் நிலையில் பொதுமக்களை கட்டாயப்படுத்தி பொருட்கள் வாங்க வலியுறுத்தக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் ஏ.வ. வேலுகண்டிப்புடன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
திமுக அரசு அறிவித்துள்ள 2 ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம் சிறப்பாகநடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரிசி வாங்கும்போது சோப்பு, சீப்பு,டீத்தூள் போன்றவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று பொதுமக்களை ரேஷன்கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஆட்சியில்தான் இப்படி மக்களை கட்டாயப்படுத்தி பொருட்களை வாங்கவைத்தார்கள். தற்போதைய திமுக ஆட்சியில், மக்கள் என்ன பொருள்கேட்கிறார்களோ அதை மட்டுமே வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைஊழியர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
இதுதொடர்பாக கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி அரிசி தவிர்த்து வேறு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் ரேஷன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் வேலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications