பாலசிங்கம் கருத்து குழப்புகிறது: கருணாநிதி
சென்னை:
ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம்தெரிவித்துள்ள கருத்துக்கள் குழப்பமாக உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதியிடம், பாலசிங்கம் கருத்து குறித்து கேட்டபோது,பாலசிங்கம் சொன்னதை விடுதலைப் புலிகள் இயக்கமே கூட மறுத்துள்ளது. அவரது கருத்துக்கள் குழப்பமாகஉள்ளன, தெளிவாக இல்லை என்றார்இலங்கை-தமிழ் தெரிந்தால்தான் வேலை:
இதற்கிடையே இலங்கையில் இனி தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் தெரிந்தவர்களுக்குமட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.தமிழர்களைக் கவரும் விதமாகவே இந்த நடவடிக்கையை இலங்கை அரசுஎடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
இலங்கை இனப் பிரச்சினையில் பெரும் தேக்க நிலை காணப்படுகிறது. நார்வேநாட்டின் மத்தியஸ்த முயற்சிகள் முடங்கிக் கிடக்கின்றன. தமிழர் பகுதிகளைத்தாக்கிவந்த இலங்கை ராணுவம் தனது தாக்குதலை மட்டுப்படுத்தியுள்ளது. இருப்பினும்புலிகளுடன் அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில்நூறறுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போர் பீதி அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அரசு புதிய நடவடிக்கை ஒன்றைஎடுத்துள்ளது. அதன்படி இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இரு மொழிக்கொள்கையை அரசு மட்டத்தில் தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை அரசுப் பணிகளில் சிங்களர்களே அதிக அளவில் உள்ளனர்.இதனால் தமிழர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையைமாற்றும் விதமாக இனிமேல் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் நன்குதெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என இலங்கை அரசுஅறிவித்துள்ளது.
தற்போது அரசுப் பணியில் உள்ள சிங்களர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வாயப்புஏற்படுத்தித் தரப்படும். அதேபோல சிங்களம் தெரியாத தமிழர்களுக்கு சிங்களம்கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து அந்நாட்டு அரசியல் விவகாரத்துறை அமைச்சர் குணசேகராதெரிவிக்கையில்,
இந்த நடவடிக்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். அப்படிச்செய்திருந்தால் பல குழப்பங்களை நாம் தவிர்த்திருக்காலம். இனியும் காலம்தாழ்த்தாமல் இரு மொழிக் கொள்கையை அரசு தீவிரமாக கடைப்பிடிக்கும்.
தமிழ், சிங்களம் என இரு ஆட்சி மொழிகள் இருந்தாலும் ஆங்கிலமும் இணைப்புமொழியாகத் தொடரும் என்றார் குணசேகரா.
இந்த நடவடிக்கை தமிழர்களை அரசின் பால் ஈர்க்கும் திட்டமாகவே கருதப்படுகிறது.இருப்பினும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் இலங்கை இனப்பிரச்சினைக்கு எந்த வகையில் பலன் கிடைக்கும் எனத் தெரியவில்லை.
மதுரை ஆதீனம் புது யோசனை:
இதற்கிடையே இலங்கை இனப் பிரச்சினைக்கு இந்தியப் பிரதமர், இலங்கை அதிபர்,தமிழக முதல்வர், விடுதலைப் புலிகளின் தலைவர், நார்வே நாட்டு தூதுக் குழுத்தலைவர் ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைத்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும்என்று மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில்,
இலங்கையில் இனப் பிரச்சினை தொடங்கி 23 ஆண்டுகள் ஓடி விட்டன. தமிழகத்தில்உள்ள அத்தனை தலைவர்களும் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டி மக்கள்நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டார்கள் என்பதை உலகம்அறியும்.
சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும்யுத்தத்தால் லட்சக்கணக்கான தமிழர்கள், சிங்களர்கள் தங்களது உயிரைஇழந்துள்ளனர். கோடிக்கணக்கான சொத்துக்கள், பொருட்கள் நாசமாகியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு கால கட்டங்களில் நடந்தபேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. சமீப காலத்தில் நார்வேநாட்டு தூதர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றுள்ளது. இப்போது மீண்டும்சண்டை மூண்டு விட்டது.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கலாம்.அந்தக் குழுவில் இந்தியப் பிரதமர், தமிழக முதல்வர், விடுதலைப் புலிகளின்தலைவர், இலங்கை அதிபர், நார்வே நாட்டுத் தூதர் ஆகிய ஐந்து பேர் இடம் பெறவேண்டும்.
இந்தத் தலைவர்கள் உடனடியாக கூடி விவாதித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இலங்கையில் மனித இனம் அழிந்து கொண்டிருக்கிறது. இதற்குஉடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், அச்சமின்றியும்வாழ்ந்திட வழி வகை காணுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஆதீனம்.
கண்காணிப்பில் அகதிகள்: டிஜிபி
இந் நிலையில் தமிழகம் வந்துள்ள இலங்கை அகதிகள் தீவிரக் கண்காணிப்பின் கீழ்வைக்கப்பட்டுள்ளனர் என்று டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில்இருந்தவர்களும் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு டிஜிபி முகர்ஜி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் தமிழகத்திற்கு அகதிகள் அதிக அளவில் வந்துகொண்டுள்ளனர். வந்து இறங்கும் அகதிகள் முதலில் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்படுகிறார்கள்.
அவர்கள் உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள்தானா என்பதுகண்டறியப்படுகிறது. அதன் பின்னர் மண்டபத்தில் உள்ள இலங்கை மறுவாழ்வுகாவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்படுவர்.
அதற்கு முன்பாக அவர்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படும். பெரும்பாலானஅகதிகள் திரிகோணமலை, மன்னார் மாவட்டத்திலிருந்துதான் வந்துள்ளனர்.
இவர்களின் பெயர்கள் மண்டபம் சிறப்பு துணை ஆட்சியர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.
அதன் பின்னர் காவல்துறை க்யூ பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு அகதிகள்அனுப்பப்படுவர். அவர்களை சரி பார்த்து, விசாரணை நடத்திய பின்னர் திறந்தவெளிமுகாமில் தங்க அனுமதிக்கப்படுகிறது.
சந்தேகப்படும்படியான அகதிகளை, தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அதிகபட்சம் 1மாத காலத்திற்கு தங்க வைக்கப்படுவார்கள்.
தற்போது மண்டபம் முகாமில் 98 அகதிகள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
அவர்கள் ஏதாவது ஒரு போராளிக் குழுவினால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாகஅல்லது விலகி வந்தவர்களாக அடையாளம் காணப்பட்டால், கைது செய்யப்பட்டுசெங்கல்பட்டு அல்லது செய்யாறில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்படுவர்.
இதுவரை மொத்தம் 3673 அகதிகள் மண்டபம் முகாமுக்கு வந்துள்ளனர். இவர்களில்1673 பேர் ஏற்கனவே இங்கிருந்து, பின்னர் இலங்கையில் அமைதிய திரும்பியபின்னர் அங்கு சென்று விட்டு, தற்போது மீண்டும் அமைதியின்மை நிலவுவதால்மறுபடியும் வந்துள்ள பழைய அகதிகள் ஆவர்.
செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் 24 அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 6 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள்.
3 பேர் இதர போராளி குழுக்களைச் சேர்ந்தவர்கள். 11 பேர் கடத்தல்காரர்கள், 4 பேர்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். தமிழகத்தில் மொத்தம் 99 அகதிகள்முகாம்கள் உள்ளனர்.
இவற்றில் மொத்தமாக 53,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications