மதமாற்றம்: வெளிநாட்டு தம்பதியை வெளியேற்றக் கோரி வழக்கு
சென்னை:
மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா-கனடாவைச் சேர்ந்ததம்பதியை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஷெனாய் நிகரைச் சேர்ந்த மார்ட்டின் என்ற முருகன் இதுதொடர்பாக தாக்கல்செய்துள்ள மனுவில்,கனடாவைச் சேர்ந்த டேவிட் ரொனால்டு வாட்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தஅவரது மனைவி டோரத்தி ஆகியோர் செவன்த்டே அட்வென்ட்டிஸ்ட்ஸ் என்றஅமைப்பின் சார்பில் இந்தியாவுக்கு வந்துள்ளனர். வர்த்தக விசா மூலம் இருவரும்இந்தியா வந்துள்ளனர்.
ஆனால் இந்த அமைப்பு இந்தியாவில் எந்த வர்த்தகமும் செய்யவில்லை. அதுபோலஇவர்கள் இருவரும் வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. இவர்களது வருகையின் முக்கியநோக்கம் மதமாற்றப் பணிதான்.
தங்களைப் போல மேலும் 4 வெளிநாட்டுத் தம்பதிகளை இந்தியாவுக்குவரவழைத்துள்ளனர். இவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை தங்களது மயக்கும் பேச்சுமூலம் மதம் மாற்றியுள்ளனர்.
இவர்கள் மீது மத்திய அரசுக்குப் புகார் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 15 நாட்களில் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று தமிழகஅரசுக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. ஆனால் தனது செல்வாக்கால் இந்த உத்தரவைதள்ளிப் போட வைத்தார் வாட்ஸ். பின்னர் இருவரும் நாட்டை விட்டு வெளியேறினர்.
தற்போது மீண்டும் 2008ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் வர்த்தக விசாவைப்பெற்று மீண்டும் இருவரும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
தங்களை வெளியேற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை தூதரகத்திற்குதெரிவிக்காமலேயே இருவரும் மீண்டும் விசா பெற்றுள்ளனர்.
எனவே இருவரையும் உடனடியாக நாட்டை விட்ட வெளியேற்ற வேண்டும் என்றுகோரியுள்ளா மார்ட்டின் என்ற முருகன்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்இதுதொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்க கூறி மத்திய, மாநில அரசுகளுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications