சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த பள்ளி இடிந்தது!
திருவள்ளூர்:
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த பள்ளிக் கூடம்திடீரென இடிந்து விழுந்தது. வகுப்புகள் முடிந்த பின்னர் பள்ளிக்கூடம் இடிந்ததால்மாணவர்கள் உயிர் தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆலமரத் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குதான்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 5ம் வகுப்பு வரை படித்தார்.இப்பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 392 மாணவ, மாணவியர்படிக்கிறார்கள். 9 ஆசிரியர்கள் உள்ளனர். மிகப் பழமையான கட்டடத்தில் இயங்கிவரும் இப்பள்ளியின் கட்டடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பே விரிசல் விட்டுவிட்டது. எந்த நிேரத்திலும் கட்டடம் இடியும் நிலை இருந்து வந்தது.
இதுதொடர்பாக அரசு எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் கன மழைபெய்தது. இதில் 8ம் வகுப்பின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. பள்ளி முடிந்தபின்னர் கட்டடம் இடிந்ததால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இல்லாவிட்டால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். கட்டட இடிபாடுகள் இன்னும்கூட அகற்றப்படாமல் உள்ளன. அதிகாரிகள் அந்த அளவுக்கு அலட்சியமாகஇருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் குமுறல் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் இடிந்து விட்டதால் 1, 2 மற்றும் 8ம் வகுப்புகள் மரத்தடியில் நடந்துவருகின்றன. ஏற்கனவே மற்ற வகுப்புகள் அனைத்தும் மேற் கூரை இல்லாமல்தான்நடந்து வருகின்றன.
ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாக நாடு கொண்டாடிவருகிறது. ஆனால் அவர் படித்த பள்ளிக்கு இப்படி கிடக்கிறது.
ஆசிரியர் தினத்தை கொண்டாட தமிழக கல்வித்துறை என்ன உரிமை உள்ளது?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications