வரதட்சணை கொடுமை- மருமகள் புகார்:எஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் போலீஸ் சோதனை
சென்னை:
எஸ்எஸ் சந்திரன் மீது மருமகள் தந்த வரதட்சணை கொடுமை புகாரின் பேரில் போலீசார் இன்று அவரது வீட்டைசோதனையிட்டனர். அவரது தம்பி மகன் தனசேகரனை கைது செய்தனர்.
இந்த தனசேகரனுக்கும் மதுரையைச் சேர்ந்த லதாவுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒருவருடத்துக்கு முன் இருவரும் பிரிந்துவிட்டனர். தனசேகரன் தனது சித்தப்பாவான எஸ்.எஸ்.சந்திரனின் சென்னைவீட்டில் தான் வசிக்கிறார். லதா மதுரையில் இருக்கிறார்.இந் நிலையில் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் நேற்று லதா ஒரு புகார் கொடுத்தார். அதில்,
தனது சித்தப்பா எஸ்எஸ் சந்திரனின் பேச்சைக் கேட்டு என்னை கணவர் கொடுமைபடுத்தி வந்தார். வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தினார். என் வீட்டில் பணம் வாங்கி வராவிட்டால் ஒழித்துக் கட்டிவிடுவோம் என்றுஅவர்கள் மிரட்டினர். என் நகைகளை பறித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் அங்கு வாழ முடியாதுஎன்பதால் கணவரை விட்டுப் பிரிந்துவிட்டேன்.
என்னை மிரட்டி கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் எஸ்எஸ் சந்திரன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
வீட்டில் சோதனை:
இதையடுத்து திலகர் திடல் போலீசார் உதவி கமிஷ்னர் தங்கராஜ் தலைமையில் இரவோடு இரவாக நேற்றுசென்னை வந்தனர். இன்று காலை 30 போலீசாருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்எஸ்சந்திரனின்வீட்டுக்கு வந்த தங்கராஜ், அவரது வீட்டில் சோதனை போட்டார்.
இதற்கு சந்திரன் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டுக்குள்போலீஸாரை விட மறுத்தனர். எஸ்.எஸ்.சந்திரனின் மனைவி ராஜம், மகள் கண்மணி,மகன் மற்றும் தம்பி மகன் தனசேகரன் ஆகியோர் போலீஸாரிடம் வாக்குவாதம்செய்தனர்.
ஆனால் அவர்களுக்குப் பதில் சொல்லாத போலீஸார் வீட்டுக்குள் நுழைந்துஒவ்வொரு அறையாக சோதனை போட்டனர். ஒரு கட்டத்தில் எஸ்.எஸ்.சந்திரனின்மகள் கண்மணியின் அறைக்குள் நுழைந்து அத்தனை போலீஸாரும் சோதனைபோட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனையை முடித்த போலீசார் தனசேகரனை வரதட்சணை கொடுமை வழக்கில்கைது செய்து அழைத்துச் சென்றனர். சந்திரனின் மூத்த மகள் கண்மணியையும்விசாரணைக்கு அழைத்தனர். ஆனால், அவர் போலீசாருடன் செல்ல மறுத்துவிட்டார்.
சுமார் 2 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடத்திய போலீசார் எஸ்எஸ் சந்திரன்அங்கு இல்லை என்பது உறுதியான பின்னரே போலீசார் அங்கிருந்து சென்றனர். கைதுசெய்யப்பட்ட தனசேகரன் வடபழனி காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தேடப்படும் எஸ்எஸ்:
இந்த வழக்கில் எஸ்எஸ் சந்திரன், அவரது மூத்த மகள் கண்மணி உள்ளிட்ட 7 பேரைதேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இ.பி.கோ 498 ஏ(துன்புறுத்துதல்), 341 (வழிமறித்தல்), 325 (கொடும் காயம்ஏற்படுத்துதல்) 501 (2) (அச்சுறுத்துதல், 307 (கொலை முயற்சி) 420 (மோசடி), 120(பி) கூட்டு சதி, வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் இவர்கள் மீது வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரை சென்றுள்ளதாகக் கூறப்படும் எஸ்எஸ் சந்திரனும் கைது செய்யப்படுவார் என்றுதெரிகிறது.
கோழைத்தனமானது: எஸ்எஸ்
போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து எஸ்எஸ் சந்திரன் நிருபருக்கு தந்துள்ளபேட்டியில்,
என் தம்பி மகன் தனசேகருக்கும் லதாலுக்கும் விவாகரத்தாகி 2 வருடம் ஆகிவிட்டது.இப்போது அந்த வழக்கை தூசு தட்டி எடுத்து என்னை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது.லதாவிடம் வரதட்சணை கேட்டு நான் தூண்டியதாக வழக்கு போட்டுள்ளனர்.விவாகரத்து பெற்ற பின் எப்படி புகார் கொடுத்து இருப்பார்.
போலீசார் என் வீட்டில் சோதனை போட்டதை என் உறவினர்கள் வீடியோவில் பதிவுசெய்துள்ளார்கள். வீட்டில் சோதனை என்ற பெயரில் பெண்களை பிடித்துதள்ளியிருக்கிறார்கள்.
கருணாநிதி மீது எங்கள் அம்மா வழக்கு போட்டபோது அவரைத் தான் கைதுசெய்தார். குடும்பத்து பெண்களை தொந்தரவு செய்யவில்லை. இந்த ஆட்சியில்யாரு"ககும் பாதுகாப்பு இல்லை. என் மேடை பேச்சுக்கு கோழைத்தனமாக பொய்வழக்கு போடுகிறார்கள். இதை கோர்ட்டில் சந்திப்பேன் என்றார்.
மகள் புகார்:
சந்திரனின் மகள் கண்மணி கூறுகையில்,
போலீசார் என் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். அங்கேயே உட்கார்ந்துகொண்டு வெளியேற மறுத்தனர். என்னை இழுத்துச் செல்லவும் முயன்றனர் என்றார்.
பொய் வழக்கு:
சந்திரனின் மகன் ரங்கராஜன் கூறுகையில்,
என் தந்தை பொதுக் கூட்டத்தில் திமுகவை தாக்கிப் பேசியதற்காக அவதூறு வழக்குபோட்டார்கள். அதில் அவர் முன் ஜாமீன் வாங்கிவிட்டதால் கைது செய்யமுடியவில்லை. இதனால் இந்த பொய் வழக்கை ரெடி செய்துவிட்டார்கள்.
சோதனை என்ற பெயரில் வீட்டில் நுழைந்து என் அம்மாவை கீழே பிடித்துதள்ளிவிட்டனர் போலீசார் என்றார்.
அந்த பயம்:
எஸ்.எஸ்.சந்திரனின் மனைவி ராஜம் கூறுகையில், எதற்காக வந்திருக்கிறோம் என்பதைக் கூட போலீஸார் சொல்ல மறுத்து விட்டனர். அவர் வீட்டில்இல்லை, மதுரை போயிருக்கிறார் என்று கூறியும் கூட அவர்கள் நம்பாமல் அறை அறையாகப் போய் சோதனை போட்டனர்.
எனக்கு என்ன பயம் என்றால், இவர்களாகவே எதையாவது கொண்டு வந்து வைத்து விட்டு இதைக் கைப்பற்றினோம், அதைக் கைப்பற்றினோம்என்று கூறி விடுவார்களோ என்று எங்களுக்குப் பயமாக உள்ளது என்று ராஜம் கூறினார்.
வீட்டில் புகுந்து கஞ்சா வைத்துவிட்டு, அதை வைத்து ஆட்களை கைது செய்யும் புரட்சி ஸ்டைல் அதிமுக ஆட்சியில்அறிமுகப்படுத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது. அதே ஸ்டைலை தங்களிடமேகாட்டிவிடுவார்களோ என்ற பயம் போலும் எஸ்.எஸ். சந்திரன் மனைவிக்கு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications