காவல்துறையில் லஞ்ச-ஊழல்: விஜயகாந்த் புகார்
சென்னை:
தமிழக காவல்துறையில் லஞ்ச, ஊழல் பெருகி வருகிறது. இதுகுறித்து சட்டசபையில்பேசவுள்ளேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500 பேர் இன்று அக்கட்சிகளிலிருந்து விலகிதேமுதிகவில் இணைந்தனர். இதையொட்டி கட்சியின் தலைமைக் கழகஅலுவலகமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில்விஜயகாந்த் பேசுகையில்,நமது தேர்தல் அறிக்கையில், ரேஷன் பொருட்களை வீடு தேடி வந்து கொடுப்போம்என்றோம். இப்போது ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு கிலோ அரிசியைக்கொடுக்கிறார்கள். நம்மால்தான் இது நடந்தது.
அரசுப் பள்ளிகளில் 40 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம்கடைப்பிடிக்கப்படும் என்றோம். அதன் பலனாகத்தான் இப்போது துரித கதியில்ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளனர்.
நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நாம் நினைத்தது, சொன்னதுஇன்று நனவாகி வருகிறது. மக்களுக்கு நல்லது நடந்தால் போதும்.
நமக்கு எந்த டிவியும் ஆதரவு கிடையாது. எனவே உங்களை யாரும் டிவியில் காட்டமாட்டார்கள். ஏன் என்னையே காட்டுவதில்லை. எனவே நமது கட்சியைப் பற்றியும்,உங்களைப் பற்றியும் நீங்களேதான் மக்களிடம் சென்று சொல்ல வேண்டும்.
புதிய கட்சியான நாம் 28 லட்சம் ஓட்டுக்களை வாங்கி பலத்தை நிரூபித்துள்லோம்.இதைப் பார்த்து இரண்டு பெரிய கட்சிகளும் மிரண்டு போயுள்ளன.
முன்பெல்லாம் மக்களை சந்திப்பதற்கு அமைச்சர்கள் வரவே மாட்டார்கள்.இப்போதெல்லாம் ஓடி ஓடிப் போய் பார்க்கிறார்கள்.
காவல்துறையில் லஞ்சம் அதிகம் உள்ளது. இதுகுறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து சட்டசபையில் விரிவாகபேசுவேன் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications