கருணாநிதியை சந்திக்கும் இலங்கை துணை தூதர்
சென்னை:
இலங்கை அகதிகள் குறித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் அடிக்கடி இலங்கைகடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேசதிட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதராக புதிதாகநியமிக்கப்பட்டுள்ள அம்சா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதராக அம்சா இன்று பொறுப்பேற்றுக்கொணடார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுநடத்துவேன். அதேபோல, அகதிகள் வருகை குறித்தும் அவருடன்ஆலோசிக்கப்படும்.
தென்னிந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாரம்பரியத் தொடர்புகள் உள்ளன.இதை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அம்சா.
மேலும் 93 அகதிகள் வருகை:
இதற்கிடையே இன்றும் இலங்கையிலிருந்து மேலும் 93 அகதிகள் தமிழகம் வந்தனர்.
இலங்கையில் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தினசரி அங்கிருந்துஏராளமான தமிழர்கள் தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளுக்கு 93அகதிகள் வந்தனர். 32 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் 36 பேர் ஆண்கள், 33பேர் பெண்கள், 24 குழந்தைகள் இருந்தனர்.
அனைவரும் திரிகோணமலை, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.படகுக்கு வாடகையா தலா ரூ. 10,000 கொடுத்து தமிழகம் வந்ததாக அவர்கள்தெரிவித்தனர்.
இலங்கையில் நிலைமை மோசமாகி வருவதாகவும், தமிழர்களின் உயிர் மற்றும்உடமைக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் அகதிகள்தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications