அகதி முகாம்கள்: கருணாநிதியிடம் விடுதலை சிறுத்தை ஆய்வறிக்கை
சென்னை:
இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை குறித்த ஆய்வறிக்கையை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார் முதல்வர் கருணாநிதியிடம்வழங்கியுள்ளார்.
அகதிகள் முகாம்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்டது. கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் மண்டபம் அகதிகள் முகாமுக்குச் சென்று அங்குஅகதிகளை சந்தித்து உரையாடினார்.முகாமையும் அவர் சுற்றிப் பார்த்தார். மேலும் முதல்வர் கருணாநிதியும் கட்சிஎம்.எல்.ஏ. ரவிக்குமாரிடம், அகதிகள் முகாம்களில் மேற்கொள்ளப்பட வேண்டியபணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாமுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்ட ரவிக்குமார் இதுதொடர்பான அறிக்கையை கருணாநிதியிடம்வழங்கினார்.
இந்த அறிக்கையில், மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்குறித்த 33 பரிந்துரைகளை ரவிக்குமார் இணைத்துள்ளார். அகதிகளை முறையாகப்பதிவு செய்ய வேண்டும்.
அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். புகைப்படத்துடன் கூடியஅடையாள அட்டை வழங்க வேண்டும்.
12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு தலா ரூ. 839க்குக் குறையாமலும், 12 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு தலா ரூ. 500ம் மாதந்தோறும் தர வேண்டும்.
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் வழங்கவேண்டும். மண்ணெண்ணை அளவை 10 லிட்டராக உயர்த்த வேண்டும்.
அகதிகள் குடியிருக்கும் பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.அக்திகள் முகாம்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவ அனுமதி அளிக்க வேண்டும்என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை ரவிக்குமார் அரசுக்கு அளித்துள்ளார்.
இவற்றில் 28 மாநில அரசே செய்யக் கூடிய வகையில் உள்ளது. மற்ற 5பரிந்துரைகளை மத்திய அரசு செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் தனதுஅறிக்கையில், ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications