கால்பந்து: இறுதிப் போட்டியில் இத்தாலி!
பெர்லின்:
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட இத்தாலிஅணி தகுதி பெற்றுள்ளது. முதல் அரை இறுதிப் போட்டியில் வலிமை மிக்க ஜெர்மனிஅணியை இத்தாலி வீழ்த்தியது.
இன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸும், போர்ச்சுகலும்மோதுகின்றன.
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.பரபரப்பு மிகுந்த கால் இறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து நேற்று அரை இறுதிப்போட்டிகள் தொடங்கின.
![]() |
இரு அணிகளும் கடுமையாக மோதியதால் ஆட்டத்தின் முழு நேரம் முடியும்வரையில் ஒரு கோலும் விழவில்லை. இதனால் ரசிகர்களிடையே டென்ஷன்அதிகரித்தது.
கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கடுமையாகப் போராடின. எதிரணி கோல்போட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் இரு அணிகளுமே தடுப்பாட்டத்தில்இறங்கின.
இந் நிலையில், கூடுதல் நேரம் முடியவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு இத்தாலிஅணி அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு ஜெர்மனிக்கு பெரும்அதிர்ச்சியைக் கொடுத்தது.
முதல் கோலை ஃபேபியோ குரோஸ்ஸா போட்டார். அடுத்த சில வினாடிகளில் டெல்பியரோ 2வது கோலைப் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இறுதியில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சொந்த மண்ணில் ஜெர்மனி சந்தித்த தோல்வி அந்நாட்டுரசிகர்களுக்கு பெரும் சோகத்தைக் கொடுத்தது. ஜெர்மனி வீரர்களும் அதிர்ச்சியில்சமைந்து போயினர்.
![]() |
இன்று மியூனிக் நகரில் 2வது அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில்,பிரான்ஸும், போர்ச்சுகலும் சந்திக்கின்றன. இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இன்றைய போட்டியில் தோற்கும் அணி, வருகிற 8ம் தேதி ஸ்டட்கார்ட் நகரில்நடைபெறும் 3வது இடத்திற்கான போட்டியில் மோதும்.
9ம் தேதி பெர்லின் நகரில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
இதற்கிடையே, இன்றைய போட்டியில் வெல்லும் நோக்கில் பிரான்ஸும்,போர்ச்சுகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன.
பிரான்ஸ் அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய நிலையில்தான் விளையாடி வருகிறது.இருப்பினும் ஸ்பெயினுடன் நடந்த போட்டியின்போது பிரான்ஸ் வீரர்கள் பொறிகிளப்பும் வகையில் விளையாடி ஸ்பெயினை வீழத்தினர்.
இதேபோல, பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலும் பிரான்ஸ் வீரர்கள்முழுத் திறமையையும் வெளிக் காட்டினர்.அதேசமயம் போர்ச்சுகல் அணி ஆரம்பத்திலிருந்தே அசத்தி வருகிறது.
வலுவான ஹாலந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி தோற்கடித்துஅனைவரையும் அசத்தியது. இந்தப் போட்டியின்போது 4 வீரர்களுக்கு ரெட் கார்டுகொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இங்கிலாந்து அணியை காலிறுதிப் போட்டியில் சந்தித்த போர்ச்சுகல், பெனால்டி ஷூட்அவுட்டில், வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்து, இங்கிலாந்துக்கு அதிர்ச்சிவைத்தியம் அளித்தது.
பிரான்ஸ் அணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறதுஸினெடின் ஜிடேன், தியரி ஹென்றி ஆகியோர் பிரான்ஸ் அணிக்கு மிகப் பெரும்பலமாக உள்ளனர்.
ஆரம்பத்தில் சொதப்பிய ஜிடேன் இப்போது அணியின் தூணாக மாறியுள்ளார்.
போர்ச்சுகல் அணி இதுவரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதே இல்லை. இதற்குமுன்பு 1966ம் ஆண்டு அரை இறுதிப் போட்டியில் அப்போதைய சாம்பியன்இங்கிலாந்தை சந்தித்து தோல்வியுற்றுத் திரும்பியது. அதன் பின்னர் இப்போதுதான்அரை இறுதிப் போட்டிக்கு அது முன்னேறியுள்ளது.
எனவே இம்முறை இறுதிப் போட்டிக்கு நுழைய போர்ச்சுகல் கடுமையாக போராடும்என்று எதிர்பார்க்கலாம்.
போர்ச்சுகல் அணியின் மிகப் பெரும் பலம் அந்த அணியின் வீரர் டெகோ. இன்றையபோட்டி பிரான்ஸுக்கும், போர்ச்சுகலுககும் மிகப் பெரிய சவாலாக அமையும்,அதுவே ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications