வருமான வரி வழக்கு-விடுவிக்க கோரி ஜெ மனு
சென்னை:
வருமான வரி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதாசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1991-92 மற்றும் சில ஆண்டில் வருமான வரி கணக்கை குறித்த காலத்தில்காட்டவில்லை என்று ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ்மீதும் வருமான வரித்துறை 1997ல் வழக்கு தொடர்ந்தது.இவர்கள் மீது மொத்தம் 4 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும்சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றிவியல் நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளன.
இந்த வழக்கை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றுஜெயலலிதா, சசிகலா ஆகியோர் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜூ, ஜெ-சசியைவிடுவிக்க முடியாது என்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களையும், ஆவணங்களையும் பார்க்கும்போதுஇருவர் மீதும் வழக்கு தொடருவதற்கு போதுமான அடிப்படை முகாந்திரங்கள்உள்ளன என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் உண்மை நிலை இன்னும் கண்டறியப்படவில்லை என்றும்,விசாரணையின் போது நிரபராதிகள் என்று நிரூபிக்க இருவருக்கும் போதியவாய்ப்புகள் வழங்கப்படும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந் நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதாநேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த மனு மீதானவிசாரணை முடியும் வரை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்குஇன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெ-சசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதி,
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நிலுவையில்உள்ளதால் இந்த வழக்கை 3 மாதத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி, இந்த வழக்கைவிரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவாக குற்றச்சாட்டுகள்பதிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா தரப்பில் அடிக்கடி வாய்தா கேட்பதால்குற்றச்சாட்டு பதிவு செய்வது தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இந்த வழக்குக்குகால நீடிப்பு தந்தால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாக அமைந்துவிடும்என்றார்.
இதையடுத்து வழக்கை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications