வட கொரியா சரமாரியாக ஏவுகணை சோதனைஅமெரிக்கா எச்சரிக்கை-ஐநா அவரச கூட்டம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க் :

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கக் கூடிய டேபோடாங்-2 வகைஏவுகனை உள்ளிட்ட 10 ஏவுகணைகளை இன்று வட கொரியா அடுத்தடுத்து ஏவிசோதனையிட்டுள்ளது.

வட கொரியாவின் அணு, ஏவுகணை திட்டத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது. ஆனால், வட கொரியா இதைக் கண்டுகொள்வதாகத்தெரியவில்லை.

Korea

இந் நிலையில் இன்று முதல் கட்டமாக சக்தி வாய்ந்த 6 ஏவுகணைகளை வட கொரியாஏவி பரிசோதனை நடத்தியது. இதில் டேபோடாங்-2 வகை ஏவுகனை,அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கக் கூடிய திறன் படைத்தது.

இருப்பினும் இந்த டேபோடாங் ஏவுகனை இலக்கை நோக்கி சரியாக பாயாமல்பாதியிலேயே சிதறி விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மற்ற ஏவுகனைகள்ஜப்பான் கடலில் போய் விழுந்தன.

வட கொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், அமெரிக்கா ஆகியவை கண்டனம்தெரவித்துள்ளன. வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டி வரும்என ஜப்பான் எச்சரித்துள்ளது.

வட கொரியாவின் செயல் ஆத்திரமூட்டக் கூடியதாக உள்ளதாக அமெரிக்காதெரிவித்துள்ளது.

இந்த ஏவுகனை சோதனை குறித்து விவாதிப்பதற்காக ஐ. நா. பாதுகாப்பு சபையின்அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது. ஜப்பான் கோரிக்கையின் பேரில் இக்கூட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Taepodong-2

இவ்வாறு உலகெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் மீண்டும் ஒருஏவுகணையை வட கொரியா ஏவியது. இத் தகவலை ஜப்பான் பிரதமர் உறுதிசெய்தார்.

ஆனால், வட கொரியா மொத்தம் 10 ஏவுகணைகளை இன்று செலுத்தியதாக ரஷ்யராணுவம் கூறியுள்ளது. அதில் எத்தனை ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியவை என்று தெரியவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

வட கொரியாவின் ஏவுகனை சோதனையைத் தொடர்ந்து, ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. தென் கொரிய ராணுவம் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதட்டம் காரணமாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் பங்குவர்த்தகத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏவுகனை சோதனை குறித்து இதுவரை வட கொரிய அரசுத் தரப்பிலிருந்து எந்தசெய்தியும் வெளியாகவில்லை.

இருப்பினும் வட கொரியாவின் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள்குவிந்தவண்ணம் உள்ளன.

North Korean Taepodong-2 Missile range

சர்வதேச சமுதாயத்தின் தொடர் கோரிக்கையை வட கொரியா அவமதித்து விட்டதாகவெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்னோ கூறியுள்ளார்.

வடகொரியாவின் அலட்சியப் போக்கு தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கவேண்டியிருக்கும் என்றும் ஸ்னோ கூறியுள்ளார்.

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், தனது மூத்த ஆலோசகர்களுடன் வட கொரிய ஏவுகனைசோதனை குறித்து ஆலோசனை நடத்தினார். வட கொரியா பரிசோதித்துப் பார்த்துஏவுகனைகளில் ஐந்து ஏவுகணைகள் முன்னாள் சோவியத் யூனியனின் ஸ்கட் ரகஏவுகனைகள் ஆகும்.

சில நூறு கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கும் நடுத்தர ரக ஏவுகனைகள் இவை.டேபோடாங்-2 ரக ஏவுகனை மட்டுமே நீண்ட தூர ஏவுகனை ஆகும். கிட்டத்தட்ட6,000 கிலோமீட்டர் தொலைவுக்கு இவற்றை செலுத்தி இலக்குகளை தாக்க முடியும்.

இருப்பினும் இந்த ஏவுகனை சோதனை தோல்வியைத் தழுவியதாக அமெரிக்காதெரிவித்துள்ளது. ஏவப்பட்ட 42வது நொடியிலேயே இந்த ஏவுகணை திசை மாறி வெடித்துச்சிதறிவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த ஏவுகணை தயாரிப்பில் வட கொரியாவுக்கு பாகிஸ்தான் பெரும் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+