புலிகளின் தற்கொலை படை தினம்-இலங்கையில் பீதி
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையான கருப்புப் புலிகள் பிரிவுதொடங்கப்பட்டதன் 19வது ஆண்டு விழாவை விடுதலைப் புலிகள் கொண்டாடிவருகின்றனர். இதையடுத்து கொழும்பில் ராணுவத்தினரும் போலீசாரும் தீவிரபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்பு புலிகள் என்ற இந்தப் படை கடந்த 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டு முதல்தாக்குதல் ஜூலை 5ம் தேதி நடந்தது. இத்தாக்குதலை மில்லர் என்பவர் தலைமைதாங்கி நடத்தினார்.வெடிபொருள் நிரப்பப்பட்ட லாரியுடன் சென்ற அவர் ராணுவ முகாம் மீது மோதினார்.இதுதான் புலிகள் நடத்திய முதல் தற்கொலைப் படைத் தாக்குதலாகும். இந்தத்தாக்குதல் நடந்ததன் 19வது ஆண்டு தினத்தை புலிகள் இன்று கொண்டாடுகின்றனர்.
இதையடுத்து வட கிழக்குப் பகுதிகளில் கேப்டன் மில்லர் படத்துக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டு, வாகனங்களில் அவரது படத்தை வைத்துக் கொண்டு புலிகள் வலம்வந்தவண்ணம் உள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமாணவர் சங்கம் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,
எங்களது பலமும், படையும் கருப்புப் புலிகள்தான். தூண்கள் போல அவர்கள்இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் போர் களத்திற்குச் செல்லும்போது,பஞ்சு பறந்து காற்றில் கலப்பது போல தாங்கள் மேற்கொண்ட காரியத்தில் நீக்கமறகலந்து, லட்சியத்தை அடைந்து சாதனை படைக்கினறனர். மரணத்தைப் பற்றிய பயமேஅவர்களிடம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
புலிகளின் தற்கொலைப் படை நினைவு தினத்தையொட்டி தலைநகர் கொழும்பில் மிகபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் ராணுவம்குவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு விழாவை முன்னிட்டு தற்கொலைப் படைத் தாக்குதலைதலைநகரில் புலிகள் நடத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதனால் ராணுவம் அதிகபட்ச உஷார் நிலையில வைக்கப்பட்டுள்ளது.
புலிகள் இதுவரை நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் அவர்களது தரப்பில்273 பேர் உயிரிழந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலிலேயே மிகப் பெரியது என்றுகூறப்படுவது 1996ம் ஆண்டு நடந்த தாக்குதல்தான். இலங்கை மத்திய வங்கியின் மீதுநடந்த அந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோலகொழும்பு விமான நிலையத்தின் மீதும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி பெரும்சேதத்தை ஏற்படுத்தியது.
இதுதவிர இலங்கையின் முன்னாள் அதிபர் பிரேமதாசாவும் தற்கொலைப் படைத்தாக்குதலில்தான் உயிரிழந்தார். முன்னாள் அதிபர் சந்திரிகா தனது ஒரு கண்ணைப்பறிகொடுத்தார்.
கருப்புப் புலிகள் குறித்து தமிழர்களிடையே இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் வசிக்கும் விக்டர்ஆசிர்வாதம் என்பவர் கூறுகையில், கருப்புப் புலிகள் குறித்து நாங்கள்பெருமைப்பட்டாலும் இந்தத் தாக்குதல்களை புலிகள் கைவிட வேண்டும் எனஎதிர்பார்க்கிறேன்.
சிங்கள மக்களின் வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்தவே இந்தப்படைகள் தோற்றுவிக்கப்பட்டன. இப்படைகள் மூலம் தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள் அளவில்லாத மனோ பலத்தைக் கொடுத்துள்ளனர். இருப்பினும்இத்தாக்குதல்கள் போதும் என நாங்கள் கருதுகிறோம் என்றார்.
தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை:
இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றுள்ளது. இதனால் தூத்துக்குடி பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில்மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,தூத்துக்குடி மீனவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அவர்களை இலங்கை கொண்டு சென்ற கடற்படையினர் அங்குள்ள கல்பாத்திகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிக்கப்பட்ட மீனவர்கள் யார் என்ற விவரத்தைஇலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் தெரிவித்துள்ளது.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விவரம்: அமல்டன், அந்தோணி தொம்மை,ஆரோக்கியசாமி, அலெக்ஸ், ரவிக்குமார், மணிய ஜெகன், பாஸ்கர், அல்லாய்,ஜெகன்ராஜ், சுதர்சன்.
இந்த 10 மீனவர்கள் இலங்கை படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள தகவலால்தூத்துக்குடி மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.
75 அகதிகள் வருகை:
இதற்கிடையே இலங்கையில் இருந்து 75 தமிழர்கள் அகதிகளாக நேற்றிரவு வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமுக்கு வந்துள்ளனர்.
திருச்சி அருகே உள்ள இந்த அகதிகள் முகாமுக்கு வந்துள்ள 75 தமிழர்களில் 22 பேர் பெண்கள், 27 பேர் குழந்தைகள். இந்த முகாமில் மொத்தம் 1,100பேர் மட்டுமே தங்க வசதி உள்ளது.
இங்கு ஏற்கனவே 1,024 அகதிகள் இங்கு தாங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications