இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பெரும் பதற்றம்
டெல்அவிவ்:
இஸ்ரேலிய ராணுவ வீரரை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் கடத்திச்சென்றதையடுத்து பாலஸ்தீனத்தின் பல பகுதிகள் மீதும் இஸ்ரேல் குண்டு வீசி தாக்கிவருகிறது.
இதையடுத்து இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தஆரம்பித்துள்ளனர்.ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் இஸ்ரேலியசிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஜிலாட் ஷாலித் என்பவரை அல் முத்தனா என்றபாலஸ்தீன போராளிகள் குழு ஒரு வாரத்திற்கு முன்பு கடத்திச் சென்றது. அவரை மீட்கஇஸ்ரேலிய படைகள் கடுமையாக முயற்சித்து வருகின்றன. காஸா நகரில் ஷாலிட்சிறை வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.
ஆனால், ஜிலாட்டை விடுவிக்க வேண்டுமானால், இஸ்ரேலிய சிறைகளில் உள்ளபாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என பாலஸ்தீனத்தை ஆளும்ஹமாஸ் அமைப்பு கோரி வருகிறது.
ஜிலாட்டை மீட்க நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாலஸ்தீன உள்துறைஅமைச்சரின் அலுவலகம் மீது இஸ்ரேல் படைகள் 2 முறை குண்டு வீசித் தாக்குதல்டத்தின. இதில் அந்த அலுவலகம் முழுமையாக சேதமடைந்தது.
மேலும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு மின்சார, குடிநீர் சப்ளையை இஸ்ரேல்துண்டித்துள்ளது. மேலும் பல பாலஸ்தீன பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து இஸ்ரேலின் அஸ்கெலான் நகரில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் மீதுஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த ராக்கெட் பள்ளியின்கார் பார்க்கிங் பகுதியில் தாக்கியது. அப்போது பள்ளிக்கூடத்தில் யாரும் இல்லைஎன்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
இதற்கு ஹமாஸ் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர்ஏஹுத் ஒல்மர்ட் எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், இப் பகுதியில் பெரும்போரைத் தூண்டும் வகையில் ஹமாஸ் தாக்குதல் உள்ளது என்றார்.
காஸா பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரரை மீட்க காஸா நகரின் வடபகுதியில் இஸ்ரேலிய படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றன. சிறியஅளவிலான படை ஏற்கனவே திங்கள்கிழமை காலை காஸா நகருக்குள்நுழைந்துள்ளது.
ஜிலாட்டை அபு அல் முத்தனா என்ற அமைப்பு உள்ளிட்ட சில பாலஸ்தீனபோராளிகள் குழுக்கள் கடத்தியுள்ளன. அவர் தற்போது உயிருடன் இருப்பதாகவும்,ஆனால் காயமடைந்து உள்ளதாகவும், விரைவில் அவர் மீட்கப்படுவார் என்றுஇஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே கடத்தப்பட்டுள்ள இஸ்ரேல் வீரரை உடனடியாக விடுவிக்குமாறுபாலஸ்தீன ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியா கோரிக்கை விடுத்துள்ளார். அவரதுஉயிருக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டாம் என்றும், அவரைக் காப்பாற்ற அரசுத் தரப்புதீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் தனது ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல்நடத்திய தாக்குதலில் ஒரு பாலஸ்தீன காவலர் கொல்லப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications