கைகழுவப்படும் தலைமைச் செயலக திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்திட்டத்தைக் கைவிட திமுக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவருகிறது. இது ராணுவத்திற்குச் சொந்தமான இடம். இங்கு நீண்ட கால குத்தகைஅடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம் கடும் இட நெருக்கடியில் இருப்பதாக கூறி புதிய தலைமைச்செயலகம் கட்டப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

கடற்கரையில் இதைக் கட்ட முடிவு செய்து அதற்காக அங்கிருந்த மீனவர்குப்பங்களைக் காலி செய்ய முயற்சி நடந்தது. ஆனால், மீனவர்கள் போராட்டத்தில்இறங்கியதாலும் அவர்களுக்கு ஆதரவாக மேதா பட்கர் வந்திங்கியதாலும் அத்திட்டத்தை ஜெயலலிதா கைவிட்டார்.

இதையடுத்து தலைமைச் செயலகத்தையும் சட்டமன்றத்தையும் அப்படியேமகாபலிபுரம் சாலைக்கு மாற்ற திட்டமிட்டார். அங்கு பிரமாண்டமான கட்டடங்கள்எழுப்ப முடிவு செய்தார்.

ஆனால், அதையும் விட்டுவிட்டு கடைசியில் ராணி மேரிக் கல்லூரியை குறி வைத்தார்ஜெயலலிதா. கல்லூரியை இடித்து விட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அறிவித்தார்.

இதை எதிர்த்து மாணவிகள் பெரும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தத்திட்டத்தையும் கைவிட்டார் ஜெயலலிதா.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சில கட்டடங்களை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. கிட்டத்தட்ட 43.20 ஏக்கர்நிலப்பரப்பில் தலைமைச் செயலகம் கட்ட தீர்மானித்த அதிமுக அரசு, கடந்த 2003ம்ஆண்டு நிலத்தையும் கையகப்படுத்தியது.

இதில் 18.40 ஏக்கர் நிலம் அரசின் இடம். அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து22.16 ஏக்கர் நிலமும், மீதமுள்ள நிலம் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்துபெறப்பட்டது.

தலைமைச் செயலகம் கட்ட பூமி பூஜை எல்லாம் போட்டார் ஜெயலலிதா. கூடநிடந்தது. ஆனால் இந்தப் பகுதியில் தலைமைச் செயலகம் கட்ட பல்வேறுதரப்பினரும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்தனர். நீதிமன்றத்திலும் வழக்கும்தொடரப்பட்டது.

இந் நிலையில் 10,000 பேருக்கு மேல் வந்து போகும் அளவில் பெரிய கட்டடங்கள்கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெற வேண்டும் என்று சுற்றுச்சூழல்அமைச்சர் ராசாவை விட்டு அவசர உத்தரவு போட வைத்து ஜெயலலிதாவின் புதியதலைமைச் செயலக திட்டத்தை தகர்த்தார் கருணாநிதி.

இதையடுத்து தனது திட்டத்தையே கிடப்பில் போட்டார் ஜெயலலிதா.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தையே கைகழுவதிமுக அரசு முடிவு செய்துள்ளது. அண்ணா மற்றும் சென்னைபல்கலைக்கழகங்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவர்களிடமேதிருப்பித் தரவும் அரசு முடிவு செய்துள்ளது.

பட்ஜெட் உரையில் இதுகுறித்து விரிவாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+