மதுபான கடைகளை மூடக் கோரி வழக்கு
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தமிழக அரசுக்குஉத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திண்டிவனத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த பொது நலன் மனுவில், மது குடிப்பது உடல் நலக்கேடு, நாட்டுக்குக்கேடு, சட்டப்படி அது குற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.திரைப்படங்களில் மது குடிப்பது, புகைபிடிப்பது போன்ற காட்சிகள் தடைசெய்யப்பட்டுளளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அரசே மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது.
உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மதுவை அரசே விற்பது சரியல்ல,முறையல்ல. இதை கைவிடக் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகஅரசுக்குக் கடிதம் அனுப்பினேன். இதுவரை அதற்குப் பதில் இல்லை.
எனவே தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடகைளை மூட அரசுக்கு உத்தரவிடவேண்டும். மேலும் பெருகி வரும் கள்ளச் சாராய சாவுகளைத் தடுக்க காவல்துறைதீவிரமாக செயல்படவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழகஅரசின் மது விலக்கு தீர்வைத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications