பெண் தற்கொலை: சிக்குகிறார் டிவி நடிகை!
சென்னை:
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள்மதுதேவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனோகரனின் மகன் நவீன்குமாருக்கும், டிவி நடிகை நிர்மலாவுக்கும் இடையேகள்ளத் தொடர்பு ஏற்பட்டதால்தான் மதுதேவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறப்படுகிறது.இதையடுத்து துணைவேந்தரின் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். டிவிநடிகையையும் விசாரிக்கவுள்ளனர்.
நவீன்குமார் அடையாறு சாஸ்திரி நகர் 1வது அவென்யூவில் வசித்து வருகிறார். நிதிநிறுவனம் ஒன்றில் பங்குதாரராக உள்ளார்.
இவருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த மதுதேவிக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடந்திது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி மதுதேவி சென்னையில் உள்ள தனது கணவர்பங்குதாரராக உள்ள நிதி நிறுவனத்திலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மதுதேவியின் தம்பி கணேஷ்பாபு அடையாறு காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். அதில், எனது அக்காவின் திருமணத்தின்போது 500 பவுன் நகையும், ரூ.65 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்தோம்.
இத்தனை கொடுத்தும் கூட அடிக்கடி வரதட்சணை கேட்டு எனது அக்காவைமனோகரன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் டிவி நடிகை நிர்மலாஎன்பவருக்கும், எனது அக்கா கணவர் நவீன்குமாருக்கும இடையே தொடர்புஏற்பட்டது.
இது எனது அக்காவுக்குத் தெரிய வந்து அவர் மனம் உடைந்தார்.
இதையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அதிர்ஷ்டவசமாககாப்பாற்றப்பட்டு விட்டார்.
இந் நிலையில், நவீன்குமாரும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்துகொடுமைப்படுத்தியதால் கடந்த 1ம் தேதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வரதட்சணையாக கொடுத்த நகைகளில் சுமார் 100 பவுன் நகைகளை நடிகைநிர்மலாவிடம் கொடுத்து விட்டார் நவீன்குமார். எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் கணேஷ்பாபு.
இந்த புகாரின் பேரில் பி.டி.மனோகரன், நவீன்குமார், அவரது தாயார் கனகவல்லி,சகோதரி உமா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நவீன்குமார்உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். தற்கொலை செய்வதற்கு முன்புநவீன்குமாருடன் போனில் பேசியுள்ளார் மதுதேவி. அப்போது கூட நிர்மலாகுறித்துத்தான் கணவருடன் சண்டை போட்டுள்ளார்.
நடிகை நிர்மலாவுக்கும், நவீன்குமாருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்துபோலீஸார் விசாரித்ததில், தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து நிர்மலாவிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
நவீன்குமார், உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவின் மகனுடன் படித்தவராம்.இதனால் அவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், வட மாநில எம்.பிக்கள் சிலர்அடையாறு காவல் நிலையத்திற்குப் போன் செய்து நவீன்குமாரை விடுவிக்குமாறுகோரியுள்ளனர்.
மேலும் தமிழக எம்.பி. ஒருவரும் கூட போலீஸாரிடம் பேசியுள்ளார். இருப்பினும்அதைக் கண்டுகொள்ளாத போலீஸார் நவீன்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications