உரிமைகளை தட்டி பறிக்க வேண்டும்-வி.பி.சிங்
டெல்லி :
நமது உரிமைகள் கெளரவமான வழியில் நமக்குக் கிடைக்காவிட்டால் அதைத் தட்டிப்பறிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறியுள்ளார்.
வி.பி.சிங்கின் 75வது பிறந்த நாள் டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டிஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,அரசியல் அரங்கில் ஏழைகளும், நலிவடைந்த பிரிவினரும் கை கோர்த்து மாபெரும்சக்தியாக மாறும் காலம் வந்து விட்டது.
நமது உரிமைகளை முறையாகப் பெற பாடுபட வேண்டும்.
உரிமைகளைப் பெற அமைதி வழியில் முயற்சித்தும் அது கிடைக்காத பட்சத்தில்அதைத் தட்டிப் பறிக்க மக்கள் தயங்கக் கூடாது. சில நேரங்களில், இப்போது உள்ளஅமைப்புகளை எதிர்த்து போராட வேண்டும் போல என எனக்குத் தோன்றுகிறது.ஆனால் எனது வயதும் உடல் நிலையும் அதற்கு உடன்பட மறுக்கிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏழைகளின் நிலைமை மிகவும் மோசமாகஉள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் சக்தியாக அரசியல்அரங்கில் உருவெடுக்கும் காலம் வந்து விட்டது. இதுதான் சரியான நேரம்.
பல அரசியல் கட்சிகள் அரசமைப்பதற்காகத்தான் தங்களது நேரங்களைசெலவிடுகின்றன. அரசுகள் வரலாம், போகலாம். ஆனால் நமது இப்போதையதேவை, அரசு அமைப்பது அல்ல, மாறாக வலிமையான நாட்டை உருவாக்குவதுதான்.
மதவாத சக்திகளின் துணை கொண்ட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்என்றார் வி.பி.சிங்.
வி.பி.சிங் உருவாக்கியுள்ள ஜன் மோர்ச்சா கட்சியின் தலைவரான ராஜ்பாபர், நீதிக்கட்சியின் தலைவர் உதித் ராஜ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பேசினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications