தமிழகத்தைக் கலக்கும் சூறாவளிக் காற்று!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசி வருவதால் விவசாயிகள் கடும்பாதிப்படைந்துள்ளனர். புழுதிப் புயல் வீசுவதால், வாகன ஓட்டிகள் பெரும்சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இன்னும் ஆடி மாதம் பிறக்கவில்லை. ஆடி மாதத்தில்தான் காற்று பலமாக வீசும்.ஆனால் ஆடி பிறப்பதற்குள்ளேயே தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்தகாற்று வீசி வருகிறது.

சில பகுதிகளில் சூறாவளிக் காற்று போல கடுமையான சுழற்காற்று வீசுவதால்பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். திருச்சியில் வீசிய காற்றில்சாலைகளில் கிடந்த மண் புழுதிப் புயலாக மாறியது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல மதுரையிலும்பலத்த சூறாவளிக் காற்று வீசியது.

நாகப்பட்டனத்தில் நேற்று பலத்த சப்தத்துடன் சுழற் காற்று வீசியதால் பொதுமக்கள்பீதியடைந்தனர். கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்லவில்லை.

பலத்த காற்றுக்கு சென்னையும் தப்பவில்லை. கடந்த ஒரு வாரமாகவே இரவு பகலாகபலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சாலைகளில் செல்வோர் புழுதிக் கூட்டத்தில்சிக்கி அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

இந்த பலத்த காற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான். பலத்தகாற்று காரணமாக வாழை உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதனால்விவசாயிகளுக்கு பலத்த நஷடம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+