மணியனின் கொ.ப.செ பதவி பறிப்பு: ஜெ. அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டு கட்சிக்குள் ஓவர் ஆட்டம் போட்ட ஓ.எஸ்.மணியனை அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதா தூக்கியுள்ளார். அவர்மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல 5 மாவட்டச் செயலாளர்களும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மாற்றப்படுவதுஉறுதி என்று கூறப்பட்டது. இந் நிலையில் கொஞ்சம் தாமதமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அதிமுகபொதுச் செயலாளரான ஜெயலலிதா.

இதன்படி, கோவை புறநகர் மாவட்ட அதிமுகச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தாமோதரன்நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் ஆனந்த கிருஷ்ணன், இம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் பேபி ஆகியோரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த கிருஷ்ணனுக்கு பதிலாக செல்வராஜ்நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கலைச் செல்வன், ஜெ பேரவை முன்னாள் செயலாளர்மணி ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

அதே போல ஈரோடு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி நீக்கப்பட்டுஅவருக்கு பதிலாக ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு மாவட்ட இணை செயலாளர் சுசீலா, ஈரோடு மாவட்டதுணை செயலாளர் கருப்பண்ணன் ஆகியோரும் அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மனோகரன், ஈரோடு நகர ஜெ பேரவை செயலாளர்பாஸ்கி ஆகியோரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் ஒன்றிய செயலாளரான ராமலிங்கம் ஈரோடு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் அன்பழகன் நீக்கப்பட்டு, எம்எல்ஏ தங்கமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல ஓ.எஸ். மணியனையும் அதிமுக கொள்ளை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்துதூக்கியடித்துள்ளார் ஜெயலலிதா.

மேலும் நாகப்பட்டிணம் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக பிரிவுகளை இணைத்து நாகப்பட்டிணம் மாவட்டஅதிமுக என்று ஒரே அமைப்பாக மாற்றியமைத்துள்ளார் ஜெயலலிதா. இந்த ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுகசெயலாளராக மணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+