மகளை விபச்சாரத்துக்கு விற்ற தாய் கைது
சென்னை:
மகளை விபச்சாரத்துக்காக விற்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
விஜயவாடாவைச் சேர்ந்த ராமாராவ்-ஜெயா தம்பதியின் மகள் சீதா மகாலட்சுமி (வயது 19). இவரை சென்னைதி.நகரில் வசிக்கும் தங்களது உறவினரான சரஸ்வதியிடம் 4 ஆண்டுகளுக்கு பெற்றோர் விற்றுவிட்டனர்.
சீதாவுக்கு சரஸ்வதி பெரியம்மா முறை வேண்டும். சீதாவை படிக்க வைத்த சரஸ்வதி அவரை விபச்சாரத்திலும்ஈடுபடுத்தி காசு சம்பாதித்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி சரஸ்வதியிடம் இருந்துதப்பினார் சீதா.
தோழி ஒருவரின் உதவியோடு சிதம்பரத்துக்குச் சென்று அங்குா ஒரு தொண்டு நிறுவனத்திடம் தஞ்சமடைந்தார்.
இந் நிலையில் சீதாவை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக ஜெயாவும், சரஸ்வதியும் பாண்டி பஜார் போலீசில்புகார் கொடுத்தனர்.
![]() |
அந்த புகாரில், விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காகவே என்னை சரஸ்வதியிடம் என் தாயார் ஜெயா விற்றார்.விபச்சாரம் மூலம் என்னை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்று தான் சரஸ்வதி என்னை தாயார் ஜெயாவிடம்இருந்து விலைக்கு வாங்கினார்.
நான் இப்போது இவர்களுடன் சென்றால், மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவார்கள். எனவே என்னை காப்பாற்றவேண்டும் என சீதா பகீர் புகார் தந்தார்.
இதையடுத்து ஜெயா (40), சரஸ்வதி (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் விழுப்புரம் மகளிர்கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சினிமா ஆசையில் விபச்சாரம்:
இதற்கிடையே சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாக ஏமாற்றி புரோக்கரால் விபச்சாரத்தில்ஈடுபடுத்தப்பட்ட 8 பெண்களை போலீசார் மீட்டனர்.
சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தை ரேகா என்ற பெங்களூர் பெண் போன் மூலம் தொடர்பு கொண்டார்.
தமிழ் சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறியும் மாடலிங் செய்ய வாய்ப்பு வாங்கித் தருவதாகக்கூறியும் கன்னட பிரசாத் என்ற புரோக்கரும் அவது ஆட்களும் பெங்களூரில் இருந்து பல பெண்களைசென்னைக்கு கொண்டு வந்து விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருவதாக அழுதபடியே சொன்னார்.
பிரசாத் கும்பலால் விபச்சாரத்தில் தானும் தள்ளப்பட்டதாக ரேகா கூறினார். இதைடுத்து அவர் தந்த தகவலின்அடிப்படையில் சென்னை திருமங்கலத்தில் ஒரு வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர்.
அங்கு விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்தின் கூட்டாளி சரவணன் பிடிபட்டான். மேலும் அந்த வீட்டில்அடைத்து வைக்கப்பட்டிருந்த ரேகா, பத்மா, சஞ்சனா, லட்சுமி, செரீனா, சங்கீதா உள்ளிட்ட 8 பெண்களையும்போலீசார் மீட்டனர்.
இவர்கள் அனைவரும் 20 முதல் 2 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த கன்னட பிரசாத் தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதுமே புரோக்கர்களை வைத்து பெரியஅளவில் விபச்சாரம் நடத்தி வருகிறான். தமிழகத்தில் மட்டும் இவன் மீது 40 வழக்குகள் உள்ளன. 5 முறைகுண்டாசிலும் கைது செய்யப்பட்டவன்.
இவனது நெட்-ஒர்க்கை உடைக்க 4 மாநில போலீசாரும் இணைந்து செயல்பட்டால் தான் சாத்தியம்.













Click it and Unblock the Notifications