ஜனனி கள்ள நோட்டுகளை கேட்கும் சிபிசிஐடி
மதுரை:
ஜனனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மதுரைஉயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜனனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ. 30 லட்சம் வரை கள்ள நோட்டு இருந்தது.இது குறித்துசிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்டமாக ஜனனியிடம் விசாரணைநடத்தப்பட்டது. மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாத்தில் விசாரணைக்கு உதவியாக, சர்ச்சைக்குரிய பணத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்என்றும் சிபிசிஐடி போலீசார் மதுரை உயர்நீதிமன்றததில் 2 முறை மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்றமும்பணத்தை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
ஆனால் வங்கி நிர்வாகம் சிபிசிஐடி வசம் பணத்தை ஒப்படைக்க மறுத்து விட்டது. இதற்கான அதிகாரம்எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டனர். மேலும் மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தான் பணம் டெபாசிட் செய்யப்படுள்ளது. எனவே அந்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்று வாருங்கள்என்று போலீசாரை வங்கி நிர்வாகிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதனால் ஜனனி விவகாரத்தில் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிபிசிஐடி போலீஸ்தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் ஜனனி கள்ள நோட்டு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய ரூ. 30 லட்சம் பணம் குறிப்பது நாசிக் சென்றுவிசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே அந்த பணத்தை பரோடா வங்கி எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications