வட மாநிலங்களில் சிக்கிய 3000 தமிழக லாரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் தமிழகத்தில் இருந்து சென்றஆயிரக்கணக்கான லாரிகள் நடுவழியில் சிக்கிக் கொண்டுள்ளன.
கன மழையால் இந்த மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் சாலைப்போக்குவரத்து தடைபட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் இருந்து முட்டை, ஜவ்வரிசி, ஸ்டார்ச், ஜவுளி, மாம்பழம், தேங்காய் ஆகியவற்றை ஏற்றிசசென்ற சுமார் 3,000 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த லாரிகள் அந்த மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் உள்ளிட்ட பிற பொருட்களை தமிழகத்துக்குகொண்டு வரும். இப்போது பொருட்களை இறக்கவே முடியாத நிலையில் தமிழகத்துக்கு பொருட்கள் கொண்டுவருவதும் தடைபட்டுள்ளது.
இதனால் பல கோடி ரூபாய் மதிப்பு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications