வேலைக்கு திரும்பினர் என்எல்சி ஊழியர்கள்
நெய்வேலி:
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் நிலையத்தின் ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர்.
இந்த நிறுவன பங்குகளை விற்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து தொழிற்சங்கநிர்வாகிகளின் அவரசக் கூட்டம் நேற்றிரவு நடந்தது.அதில் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்துநேற்றிரவே அவர்கள் வேலைக்குத் திரும்பினர்.
இதையடுத்து நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் மின் உற்பத்தியும் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந் நிலையில் பங்கு விற்பனையை நிறுத்த உதவிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமரின் முடிவு குறித்து நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
வியர்க்க வைக்கும் உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்துள்ள வெற்றி இது. இது தொழிலாளர் பிரச்சனைஎன்பதால் தான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து போராடினோம்.
நெய்வேலி, நால்கோ நிறுவனங்களின் பங்கு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கம்யூனிஸ்ட் கட்சிகளும்வரவேற்றுள்ளன.












Click it and Unblock the Notifications