ஐயப்பன் சிலையை ஜெயமாலா தொட்டிருக்க வாய்ப்பில்லை: பணிக்கர்
திருவனந்தபுரம்:
ஐயப்பன் சிலையை ஜெயமாலா தொட்டு வணங்கியிருக்க வாய்ப்பே இல்லை என இந்த விவகாரத்தை கிளப்பியஉன்னி கிருஷ்ண பணிக்கர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
நான் கேரளா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல கோவில்களில் தேவ பிரஷ்னம் பார்த்துள்ளேன்.அப்போதெல்லாம் எந்த பிரச்சனையும் எழுந்ததில்லை.
![]() |
அதே போல ஐயப்பன் கோவிலுக்குள் ஜெயமாலா செல்லவோ, ஐயப்பன் பாதத்தை தொடவோ வாய்ப்பேஇல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் புகுந்து கொண்டுள்ளது. இதனால் தான் நானும் ஜெயமாலாவும் கூட்டுசேர்ந்து நாடகமாடுவதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றார்.
நீங்கள் தேவ பிரஷ்னம் பார்த்தபோது, உங்கள் மருமகன் மதுவும் கலந்து கொண்டார். அந்த நாளுக்கு 5நாட்களுக்கு முன்புதான் மதுவின் பாட்டி இறந்தார். இதனால் கோவிலில் தீட்டு ஏற்பட்டு விட்டதாக புகார்எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு,
அது குறித்து நான் தெளிவான விளக்கம் தந்துவிட்டேன். மேலும் யாருடைய தூண்டுதலாலோ தான் எனக்குஎதிராக வழக்கு போட்டுள்ளார்கள். அதை நந் சந்திப்பேன். ஜெயமாலா குறித்து என்னிடம் தேவசம்போர்ட்விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாரக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. என்னிடம் இதுவரையாரும் எதுவும் விசாரிக்கவில்லை என்றார்.
இந் நிலையில் கேரள போலீஸ் விசாரணைக்கு ஜெயமாலா உட்பட மறுத்துள்ளதையடுத்து அடுத்து என்னசெய்வது என்பது குறித்து விவாதிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்ட் இன்று காலை திருவனந்தபுரத்தில்கூடியுள்ளது.













Click it and Unblock the Notifications