செக்ஸ் கொடுமை: மாணவி தற்கொலை-2 ஆசிரியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கரூர்:

மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த இரு ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

லாலாபேட்டையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் பிரியா (13). இவர் பஞ்சப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 24ம் தேதி இவரை கவலைக்கிடமான நிலையில் இவரது பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். ஊஞ்சலில் ஆடும்போடு கயிறு கழுத்தை இறுக்கிவிட்டதாகக் கூறினர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி இச் சிறுமி பலியானாள். இதையடுத்து விபத்தில் பிரியா இறந்தாக போலீசார்வழக்கை மூடினர்.

இந் நிலையில் பிரியாவின் தந்தை பழனிச்சாமி, சுவாதி பெண்கள் அமைப்பை அணுகி தனது மகள் ஊஞ்சல் கயிறுஇறுக்கி சாகவில்லை என்றும், பள்ளியில் ஆசிரியர்கள் செக்ஸ் கொடுமைப்படுத்தியதால் தான் இறந்தாகவும்கூறியுள்ளார்.

தனது மகள் பிழைத்துக் கொள்வாள், அவளது எதிர்காலம் வீணாகிவிடும் என்று பயந்தே உண்மையைமறைத்ததாகவும் கூறினார்.

இதையடுத்து இந்த பெண்கள் அமைப்பு ஒரு உண்மை கண்டறியும் குழுவை அமைத்து விசாரித்தது. உடன்படிக்கும் மாணவிகள், பிரியாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக் தகவல்கள் கிடைத்தன.

பள்ளியின் கட்டட நிதிக்காக பிரியா பணம் தரவில்லை என்பதாலும், சீருடை அணிந்து வராததாலும் ஆசிரியர்செந்தில் அந்த சிறுமியை லேப் அறைக்குள் இழுத்துச் சென்று தரையில் உப்பை போட்டு முட்டி போடுமாறுகூறியுள்ளார்.

மேலும் அலெக்சாண்டர் என்ற ஆசிரியர் பிரியாவை அடித்து உதைத்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரியாவைதொடக் கூடாத இடங்களில் தொட்டுள்ளனர். பின்னர் பாலியல் ரீதியிலும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து மாலையில் அழுதபடியே வீட்டுக்கு வந்த பிரியா தனது தங்கையிடம் நடந்தை சொல்லிகதறியுள்ளார். நாளைக்கும் ஆசிரியர்கள் என்னை லேபுக்கு வரச் சொல்லியுள்ளனர் என்று பயத்துடன்கூறியுள்ளார்.

இதையடுத்தே தூக்கில் தொங்கியிருக்கிறாள் பிரியா. ஆனால். இதைப் பார்த்துவிட்ட குடும்பத்தினர் அவளை ஒருவழியாக காப்பாற்றி, ஊஞ்சல் கயிற்றில் கழுத்து இறுக்கியதாக கதை கட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த விவரங்கள் தெரிய வந்ததையடுத்து கரூர் எஸ்பியை சந்தித்த சுவாதி பெண்கள் அமைப்பினர் அவரிடம்புகாரி கொடுத்தனர். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணையில் இறங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையிலும் பிரியாவிடம் ஆசிரியர்கள் செக்ஸ் டார்ச்சர் செய்தது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து ஆசிரியர்கள் செந்தில், அலெக்ஸாண்டரை கைது செய்ய கரூர் எஸ்பி சங்கர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+