லெபனானுக்கு நேட்டோ படை-அமெரிக்கா திட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

தெற்கு லெபனானில், இஸ்ரேல் எல்லையையொட்டி பகுதிகளில் அமைதி காக்கும் பணியில் நேட்டோ படைகளைஈடுபடுத்த அமெரிக்க தயாராக இருப்பதாக ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதர் ஜான் போல்டன்தெரிவித்துள்ளார்.

லெபனானின் தெற்குப் பகுதியை தனது தொடர் தாக்குதல்களால் சின்னாபின்னப்படுத்தி வருகிறது இஸ்ரேல்.பல்வேறு நாடுகளும், ஐ.நா. சபையும் போர் நறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் கூட அதை கண்டு கொள்வதாகஇல்லை இஸ்ரேல்.

அமெரிக்காவின் முழு ஆதரவு இருப்பதால் இஸ்ரேல் உலக நாடுகளைப் பற்றிக கவலைப்படாமல் தொடர்ந்துலெபனானை துவம்சம் செய்து வருகிறது.

இந் நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் ஆதிக்கம் அதிகம் உள்ள தெற்கு பகுதியில்,இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நேட்டோ படைகளை அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தலாம்என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அமீர் பெரேஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா படையினரை வெளியேற்ற நேட்டோ படைகளை ஈடுபடுத்தலாம் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த யோசனையை லெபனான் பிரதமர் எதிர்த்துள்ளார். லெபனானில் சர்வதேச படைகளை அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்றது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இஸ்ரேலின் யோசனையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் ஜான் போல்டன் கூறுகையில், இஸ்ரேலின் யோசனை புதிதானது.இதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். லெபனானில் ஐ.நா.அமைதிப் படையை ஈடுபடுத்த நாங்கள்விரும்பவில்லை. மாறாக, ஐ.நா.வின் ஒப்புதலைப் பெற்று நேடோ படையை அமைதி காக்கும் பணிக்கு அனுப்பஅமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இந்த நேடா படையில் அமெரிக்க வீரர்களை ஈடுபடுத்த அதிபர் புஷ் ஆர்வம் காட்டவில்லை என்றார் போல்டன்.

இதற்கிடையே கடந்த 12 நாட்களாக லெபனானை தாக்கி வரும் இஸ்ரேலின் வேகம் குறைவது போலத்தெரியவில்லை. தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாஅமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரை இஸ்ரேல் படைகள் பிடித்துள்ளன. அப்பகுதியில் இஸ்ரேல்தரைப் படையினரும் ஊடுறுவியுள்ளனர்.

தெற்கு லெபனானில் தற்போது 7 லட்சம் பேர் தத்தளித்து வருகின்றனர். அங்கிருந்து தப்ப அவர்கள் பன்னாட்டுஉதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர் என்று ஐ.நா. அவசர கால மீட்புப் பணி ஒருங்கிணைப்பாளர் ஜேன்ஈகிலாண்ட் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட் நகருக்கு வந்த அவர் அங்குசெய்தியாளர்களிடம் கூறுகையில், சுமார் 7 லட்சம் பேர் தெற்குலெபனானில் தவித்து வருகின்றனர். பன்னாட்டு உதவிகளை அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மனிதாபிமானமே இல்லாத வகையில் இஸ்ரேலின் தாக்குதல் உள்ளது. குறிப்பாக பெய்ரூட் அருகே உள்ள ஹாரட்ரீக் பகுதியில் இஸ்ரேல் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது என்றார் அவர்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் ஆகியோர்,செளதி அரேபிய குழுவை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்து லெபனான் பிரச்சினை குறித்துவிவாதிக்கவுள்ளனர்.

செளதி அரேபிய வெளியுறவு அமைச்சரான இளவரசர் செளத் அல் பைசல், தேசிய பாதுகாப்பு கவுன்சில்தலைவரான இளவரசர் பந்தர் பின் சுல்தான் ஆகியோர் புஷ் மற்றும் ரைஸை சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தசந்திப்புக்குப் பின்னர் ரைஸ் இன்று மாலை இஸ்ரேல் புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து பாலஸ்தீனத்திற்கும்அவர் செல்கிறார்.

இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கைக் குழந்தைகள்கூட கை, கால்களை இழந்து தவித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+