பாஜக எம்.பிக்கள் கடும் அமளி-நாடாளுமன்றம்ஸ்தம்பிப்பு-இரு சபைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதால்நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.லோக்சபா கூட்டம் தொடங்கியதும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் எழுந்துமும்பை தீவிரவாதத் தாக்குதல், இந்திய விமானப்படையில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளின் ஊடுறுவல்,
பிரதமர் அலுவலகத்தில் உளவு பார்க்கப்பட்டது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு,ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகள் விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து விவாதிக்கவேண்டும் என்றும், இதற்காக கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினர்.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் இருக்கை முன்பு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
அவர்களை இருக்கைக்கு போகுமாறு சாட்டர்ஜி பலமுறை கோரிக்கை விடுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிஎம்.பிக்கள் கேட்காமல் தொடர்ந்து மறியல் செய்த வண்ணம் இருந்தனர். இதனால் சபையில் பெரும் அமளிநிலவியது.
கோபமடைந்த சோம்நாத் சாட்டர்ஜி, உங்களுக்கு சபை நடக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை, இப்படியேசெய்து கொண்டிருந்தால் நான் சபையை ஒத்திவைக்க வேண்டி வரும் என்று பலமுறை எச்சரித்தார்.
ஆனாலும் அவரது எச்சரிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்துஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
இதையடுத்து வேறு வழியின்றி 11.40 மணிக்கு இன்று முழுவதும் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டுசாட்டர்ஜி வெளியேறினார்.
இதே காரணத்திற்காக ராஜ்யசபாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் சபையை நடத்த முடியவில்லை. இதையடுத்து முற்பகல் 11.15 மணிக்கு சபையை நாளை வரைஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு வெளியேறினார் சபைத் தலைவர் பைரான் சிங் ஷொகவத்.
இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த நேற்று அனைத்துக் கட்சியினருடன்சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications