வரதட்சணைக்காக காணாமல் போன மணமகன்திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருமண நாளன்று காணாமல் போய் விட்டுத் திடீரென திரும்பி வந்த மாப்பிள்ளையைகல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கூறி விட்டதால் திருமணம்நின்று போனது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சுதாகரனுக்கும் திருத்தணியைச் சேர்ந்தஊர்மிளாவுக்கும் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

நேற்று முன் தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இருவீட்டாரும், அவர்களதுஉறவினர்களும் திரளாக கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாப்பிள்ளை இரவு தனதுஅறைக்குச் சென்று படுத்தார்.

நேற்று காலை மாப்பிள்ளையைக் காணவில்லை. பதற்றமடைந்த அனைவரும் மாப்பிள்ளையைத் தேடினர். ஆனால் அவர் எங்குசென்றார் என்று தெரியவில்லை.

இதையடுத்து மணமகனின் தந்தை போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வந்துவிசாரணை நடத்தினர்.

இந் நிலையில் காலை 10 மணிக்கு சுதாகரன் கல்யாண மண்டபத்தில் உள்ளபுகைப்படக்காரருக்கு போன் செய்தார். நான் ஆவடியில் இருக்கிறேன். மண்டபத்திற்குஎப்படி வருவது என்று தெரியவில்லை.

யாராவது வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மணமகன் வீட்டார் விரைந்து சென்று சுதாகரனை அழைத்து வந்தனர்.அங்கு தான் காணாமல் போனது குறித்து கதை அடித்தார் சுதாகரன்.

நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில மர்ம நபர்கள் எனது அறைக்குள்புகுந்து முகத்தில் மயக்க மருந்து தெளித்து காரில் கடத்திச் சென்றனர்.

எங்கு கொண்டு செல்லப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. மயக்கம்தெளிந்தபோது நான் ஆவடியில் இருப்பது தெரிய வந்தது என்று அவர் கூறினார்.

இதைக் கேட்ட மணமகள் ஊர்மிளா கோபமடைந்தார். இது கட்டுக்கதை. இதை நான்நம்ப மாட்டேன். கல்யாணத்திற்கு முன்பே இப்படி நாடகம் போடும் இவரை நம்பிநான் கழுத்தை நீட்ட தயாராக இல்லை. இவரை மணக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

இதையடுத்து சுதாகரனின் தந்தை ருத்ரதாண்டவம் ஆடினார். கல்யாண மண்டபத்தின்கதவுகளை மூடிய அவர், கல்யாணத்தை மணப்பெண் நிறுத்தி விட்டார். இதுவரைசெலவிட்ட தொகையை மணப்பெண் வீட்டார் திருப்பிக் கொடுத்தால்தான்அனைவரையும் வெளியே போக அனுமதிப்பேன் என்று அவர்ஆவேசமாக கூறினார்.

ஆனால் சற்றும் சளைக்காத பெண் வீட்டார் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.போலீஸாரும் விரைந்து வந்து இருவீட்டாரிடமும் பேச்சுவார்தை நடத்தினர். தனதுமுடிவில் ஊர்மிளா உறுதியாக இருந்தார்.

இதையடுத்து சுதாகரனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கடத்தியது யார்? எங்கேகொண்டு சென்றார்கள்? இதை யாரும் பார்க்கவில்லையா என்று அவர்கள் கேட்டகேள்விகளுக்கு பதில சொல்லமுடியாமல் முழித்தார் சுதாகரன்.

போலீஸாரின் கிடுக்கிப் பிடியால்அரண்டு போன சுதாகரன் எனக்கு கல்யாணமேவேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் கல்யாணம் நின்று போனது. இருவீட்டாரும், அவர்களது உறவினர்களும் மண்டபத்தைக் காலி செய்து விட்டுகிளம்பினர்.

சுதாகரன் வேண்டும் என்றேதான் தலைமறைவானதாகவும், வரதட்சணை கூடுதலாககேட்பதற்காக மணமகன் வீட்டார் நடத்திய நாடகம்தான் இது என்றும் பெண் வீட்டார்குற்றம் சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+