அழகி ஷோபாவின் சதியில் வீழ்ந்த தந்திரி
திருவனந்தபுரம்:
சபரிமலை தந்திரி விவகாரத்தில் விபச்சாரப் பெண்ணான ஷோபா கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை தந்திரி மோகனருவுக்கு விபச்சாரப் பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஒரு கும்பல் படம் பிடித்தது.விபச்சாரப் பெண்கள் நிர்வாண கோலத்தில் இருக்க, அருகே தந்திரி அலங்கோலமான கோலத்தில் சிக்கினார்.இதையடுத்து தந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தந்திரியுடன் நிர்வாணமாக இருந்ததாகக் கூறப்படும் விபச்சாரப் பெண்களான சாந்தா, ஷோபா ஆகியோரையும்இதை படம் எடுத்த கூலிப் படையினரையும் போலீசார் விசாரித்தனர். சாந்தா, ஷோபா ஆகியோரின்செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஷோபாவின் செல்போனில் இருந்து கூலிப் படையினருக்கு அடிக்கடி பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து ஷோபாவை வீட்டுக் காவலில் வைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகின.
தந்திரியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஷோபாவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக போலீசார்கூறுகின்றனர்.
சாந்தாவுடன் ஒரே பிளாட்டில் தங்கியிருந்த ஷோபாவுக்கு தந்திரி அடிக்கடி பண உதவி செய்துள்ளார். இந்தநிலையில் ஷோபா பெரிய அளவில் தந்திரியிடம் இருந்து பணம் எதிர்பார்த்துள்ளார். அந்த பணத்தை கொடுக்கதந்திரி மறுத்துள்ளார். அதனால் தந்திரியை மிரட்டி பணம் பறிக்க ஷோபா திட்டமிட்டுள்ளார்.
தந்திரியிடம் இருந்து ரூ.1 கோடி வரை கறந்து விடவேண்டும் என ஷோபா திட்டம் தீட்டி இத் திட்டத்துக்குதிருவனந்தபுரத்தை சேர்ந்த கூலிப்படை தலைவனின் உதவியை ஷோபா நாடியுள்ளார்.
திட்டப்படி சாந்தா, ஷோபாவுடன் நிர்வாண கோலத்தில் இருந்தபோது தந்திரியை அந்தக் கும்பல் படம் பிடித்துவிட்டது. இந்தச் சதியில் சாந்தாவுக்கு தொடர்பில்லை என்று தெரிகிறது.
தந்திரியை நிர்வாண படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக ஷோபாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தசிக்கலில் இருந்து தப்பிக்க ரூ. 20 லட்சம் வரை தந்திரி பேரம் பேசியுள்ளார். ஆனால், கூலிப் படை (ஷோபாவின்யோசனைப்படி) அதற்கு படியவில்லை.
இப்போது ஷோபா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஷோபா திருவனந்தபுரம் கல்லூரியில் படிக்கும் போதுஒரு கட்சியின் இளைஞர் பிரிவில் உதவித் தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு கட்சி தலைவராகவும்இருந்துள்ளார். பின்னர் திருமணமாகி கணவரை பிரிந்த பின்னர் கொச்சிக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications