கரோலின் விவகாரம்: கோவி.கண்ணன் கைது
மதுரை:
![]() |
சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக் காவலரின் மகள் கரோலினை கடத்திச்சென்று, கற்பழித்து பின்னர் கட்டாயக் கல்யாணம் செய்த பைனான்சியர் கோவி.கண்ணன் உடுமலையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் தங்கவேலுவின் மகள்கரோலின். இவரை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரைச்சொந்த ஊராகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த திரைப்பட பைனான்சியர் கோவி.கண்ணன் கடத்திச் சென்று, தனது வீட்டில் அடைத்து வைத்து கிட்டத்தட்ட 2வாரங்கள்கற்பழித்து பின்னர் கட்டாயக் கல்யாணம் செய்து கொண்டதாக சர்ச்சைஎழுந்தது.
இதையடுத்து கரோலினின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ்மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து கரோலின் மீட்கப்பட்டார்.
![]() |
இந்த கட்டாயக் கல்யாணம் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மைலாப்பூர்எஸ்.ஐ. முருகேசன், ஏட்டு உதயகுமார், போலீஸ்காரர் சந்திரன், பெண் போலீஸ்செந்தாமரைச் செல்வி ஆகிய நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களோடு கோவி. கண்ணனும் தலைமறைவாகி விட்டார்.
கண்ணன் அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீஸார் தீவிரநடவடிக்கை எடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை அவரை உடுமலைப் பேட்டையில் ஒரு லாட்ஜில்வைத்து போலீஸார் கைது செய்தனர்.
அவரை சென்னைக்குக் கொண்டு வந்த போலீசார் மைலாப்பூர் காவல் நிலையத்தில்வைத்து விசாரித்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
![]() |
கோவி. கண்ணன் தலைமறைவாக இருந்ததால், அவரால் கரோலினுக்கு ஆபத்துஏற்படலாம் என பயந்து கரோலினை அவரது பெற்றோர் புதுவை மாநிலம்வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அவரதுபெற்றோரும் அங்குதான் தங்கியுள்ளனர்.
வீராம்பட்டினம் கிராமமே கரோலின் குடும்பத்துக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது.அப்பகுதி பெண்களும், இளைஞர்களும் கரோலின் மற்றும் குடும்பத்தினருக்குபாதுகாப்பாக 24 மணி நேர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக போலீஸார் இங்கே வரக்கூடாது. அப்படி வருவதாக இருந்தால் தங்களதுஅனுமதியுடன்தான் வரவேண்டும். பகல் நேரத்தில் மட்டுமே வர வேண்டும் என்றும்ஊர் மக்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதற்கிடையே கடத்தலில் சம்பந்தப்பட்ட 4 போலீசாரும் தொடர்ந்துதலைமறைவாகவே உள்ளனர். கண்ணனை மட்டும் விரட்டிப் போய் கைது செய்தபோலீசாரால் இவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
நம்பிருவோம்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி















Click it and Unblock the Notifications