மதுரை: 3 போலீஸ் குதிரைகள் அடுத்தடுத்து சாவு
மதுரை:
மதுரை குதிரைப் படைப் பிரிவைச் சேர்ந்த 3 குதிரைகள் அடுத்தடுத்து இறந்ததால்காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை காவல்துறையில் குதிரைப் படைப் பிரிவு தனியாக உள்ளது.இதில் மொத்தம்10 உய ர்ஜாதி குதிரைகள் உள்ளன. வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் மட்டும் இந்த குதிரைகள் மீதேறி நகரில் ரோந்துப் பணியில் போலீசார்ஈடுபடுவர்.மேலும் கலவரம், முக்கியப் பிரமுகர்கள் வருகை உள்ளிட்ட முக்கியசம்பவங்களின்போது இந்தக் குதிரைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
இந்தக் குதிரைகளை பராமரிப்பதற்காக 20 போலீஸாருக்கு பயிற்சி கொடுத்துபணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் இப்போது இந்தப் பணியில்இல்லை. வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.
இதனால் குதிரைகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.இந் நிலையில், கடந்த 13ம் தேதி பல்லவன் என்ற குதிரை உணவு உட்கொள்ளாமல்அடம் பிடித்தது. கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு குதிரைபரிசோதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அக்குதிரை திடீரென மரணம் அடைந்தது.
இதேபோல அப்போலோஸ் என்ற குதிரையும், திடீரென உயிரிழந்தது. இந்தக்குதிரைக்கு 24 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியும் கூடபலன் இல்லாமல் அது இறந்தது.இதனால் குதிரைப் படைகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அதிர்ச்சி மறைவதற்குள் இன்னொரு அதிர்ச்சியாக பேசிக்கலி ரைட் என்றகுதிரையும் திடீரென இறந்துள்ளது. இந்தக் குதிரை தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஓட்டம் பிடித்தது. பின்னர் கீழே விழுந்துகாயமடைந்தது. 15ம் தேதி மாலை இறந்து போனது.
3 குதிரைகள் அடுத்தடுத்து இறந்ததால் இங்குள்ள குதிரைகளை ஏதாவது வினோதநோய் தாக்கியிருக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து அனைத்துகுதிரைகளின் ரத்த சாம்பிள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்த குதிரைகளின் ரத்த சாம்பிளும் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குதிரைகள் இறந்தது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் சிதம்பரசாமிகூறுகையில், மனிதனுக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது போல குதிரைகளுக்கும் கல்ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக பரிசோதனைகளுக்கு ரத்தமாதிரிகள் அனுப்பபப்ட்டுள்ளன.
அவை வந்தால்தான் என்ன காரணத்தால் குதிரைகள் இறந்தன என்பது தெரிய வரும்என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications