ஒட்டியாணத்தை கழட்டிவிட்டால் ஜெ ஏழையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கண்துடைப்பு என்று முன்னாள் முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முரசொலியில் வெளியாகியுள்ள கேள்வி-பதில்கள்:

கேள்வி: இனவெறி, இதயமற்றோர் நடத்திய கொடுமை இவற்றுக்கு உதாரணமாகஅண்மையில் நடந்த நிகழ்ச்சி எது?

பதில்: அண்மையில் என்ன, மிக அருகில் நடந்த நிகழ்ச்சியே உள்ளதே. இலங்கையில்குழந்தைகள் காப்பகத்தின் மீது ராணுவ விமானங்கள் குண்டுகளை பொழிந்துதாக்குதல் நடத்தியதும், அந்த நாச காரியத்தையும் நடத்திவிட்டு, அதற்கு சமாதானமும்சொல்வது போன்ற சண்டாளத்தனமும் தான் அந்த நிகழ்ச்சி.

கேள்வி: கழக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வெறும் கண்துடைப்பு என்கிறாரே ஜெயலலிதா?

பதில்: பொதுத் தேர்தல் தோல்வியினால் பொங்கி வரும் அவரது கண்ணீரைத்துடைத்துக் கொள்ள இந்தக் கண்துடைப்பு பயன்படட்டுமே.

கேள்வி: 88 லட்சம் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர் இருக்கிறார்கள்.வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு, தரிசுநிலங்களை தலா இரண்டு ஏக்கர் வீதம் வழங்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தும்என்பதாக தேர்தல் அறிக்கையிலே (20, 21 பக்கங்களில்) அச்சுப் போட்டுக்கொடுத்தவர்கள். இப்போது தரிசு நிலம் பற்றி மதிமுக தேர்தல் அறிக்கையில்ஒருபோதும் கூறவில்லை என்கிறார்களே?

பதில்: தரிசு நிலம் என்று சொல்லாமல் விளைச்சல் நிலம் என்று சொல்லியிருந்தார்கள்போலும் பொய்யர்களைப் பற்றி உடுமலை நாராயணக கவிராயர் பாடியுள்ளபாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.

கேள்வி: கியாஸ் அடுப்பு கோடிக் கணக்கான குடும்பங்களுக்கு சென்றடையுமா?

பதில்: ஏழை, எளிய பெண்கள் மகிழ்ச்சி அடைய கியாஸ் இணைப்பும் அடுப்பும்கொடுக்கிற நிகழ்ச்சி பொங்கலன்று ஆரம்பமாகி, தொடர்ந்து கொடுக்கப்படும் என்றுதானே அறிவிக்கப்பட்டிருக்கிறது. வைரம் பதித்த ஒட்டியாணத்தையும், தங்கமாலைகளையும் கழற்றி வைத்து விட்டால் ஜெயலலிதா ஏழை ஆகி விடுவாராக்கும்.கியாஸ் அடுப்பும் இணைப்பும் கேட்பாராக்கும்.

2001ம் ஆண்டு தேர்தலில், ஜெயலலிதா கட்சியின் சார்பில் வெளியிட்ட தேர்தல்அறிக்கையில் பக்கம் 69ல் கிராமங்களிலும், நகரங்களிலும் வறுமைக் கோட்டிற்கு கீழேவாழும் ஏழைப் பெண்களுக்கு உதவிடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றுஅச்சிட்டு கொடுத்தது இன்னமும் அந்தத் தேர்தல் அறிக்கை புத்தகத்தில் உள்ளது.

2001ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா கட்சிதான் வெற்றி பெற்று ஐந்தாண்டுகள்ஆட்சியிலே இருந்தார். அப்போது இந்தத் திட்டத்தைப் பற்றி வசதியாக மறந்துவிட்டவர் தற்போது 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டத்தைமூன்றே மாதங்களில் நிறைவேற்ற முன் வந்து தொடக்க விழாவை நடத்தப்போகிறோம் என்றதும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்டிய வீட்டிலேகுற்றம் காண படாதபாடுபடுகிறார்.

கேள்வி: வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிக்கும்திட்டத்தை ஏமாற்றும் திட்டம் என்கிறாரே ஜெயலலிதா?

பதில்: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இளைஞர்களின் வேலையில்லாதிண்டாட்டத்தைப் பற்றி சிறு கவலையாவது பட்டதுண்டா? தமிழ்நாடு தேர்வாணைக்கழகத்தின் சார்பில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பழக்கத்தையே ஐந்தாண்டுகாலம் நிறுத்தி வைத்து ஒரு இளைஞருக்குக் கூட வேலை வாய்ப்பு அளிக்காதவர்அல்லவா அவர்.

இந்தி திட்டத்திற்காக 110 கோடி ரூபாய் தானே ஒதுக்கியிருக்கீர்கள் என்கிறார். இவரதுஆட்சியிலே ஒரு ரூபாய் கூட ஒதுக்காதவருக்கு, தற்போது திமுக ஆட்சியிலேநிறைவேற்ற முன் வந்திருக்கும் திட்டத்தைப் பற்று கருத்து தெரிவிக்க ஏதாவதுதகுதியிருக்கிறதா என்பதை இந்த நாட்டின் இளைஞர்கள் தான் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

கேள்வி: ஜெயலலிதா திருப்பத் திருப்ப தனது அறிக்கையிலே வெறும் 30,000பேருக்கு மட்டும் தான் கலர் டிவி வழங்குப் போவதாக கூறி வருகிறாரே?

பதில்: தூங்குகிறவனை எழுப்பலாம், தூங்குவதைப் போல நடிப்பவனை எழுப்பமுடியாது என்று ஒரு பழமொழி உண்டு. முதற்கட்டமாக செப்டம்பர் திங்களில் 30,000கலர் டிவி வழங்கப்படும் என்றும், அதற்கான செலவு ரூ. 9 கோடி என்றும், ஆனால்இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே கலர் டிவி வழங்குவதற்காக மொத்தம் ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தத் தொகையிலிருந்த 30 லட்சம் பேருக்குஇந்த ஆண்டு கலர் டிவி வாங்கி வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில்தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தபோதிலும் அதையெல்லாம் முழு பூசணிக்காயை இலைச் சோற்றிலேமறைப்பது போல ஜெயலலிதா மறைக்கப் பார்க்கிறார். திமுக அரசின் திட்டங்களைஜெயலலிதா என்னதான் குறை கூறினாலும், அவர் இந்த நல்லகாரியங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமையில் புலம்பித்தவிக்கிறார் என்பதை அனைவரும் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது என அவர்கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+