61 தமிழ் சிறுமிகள் பலி: இலங்கைக்கு தமிழகசட்டசபை கண்டனம்-திருமா உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை செஞ்சோலை கிராமத்தில் இலங்கை விமானப்படை தாக்குதலில் 61அப்பாவி தமிழ்ச் சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு தமிழக சட்டப் பேரவையில்கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு 2 நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் ஒரு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.அவர் கூறுகையிஸ்,

இலங்கை முல்லைத் தீவில் இலங்கை ராணுவம் சரமாரியாக குண்டு வீசித் தாக்கியதில் 61 மாணவிகள்உயிரிழந்தது குறித்து இந்தப் பேரவை ஆழ்ந்த அதிர்ச்சியும் துயரமும் கொள்கிறது. காட்டுமிராண்டித்தனமான,மனிதாபிமானம் சிறிதுமற்ற, கொடுமை நிறைந்த இலங்கை ராணுவத்தின் இந்தச் செயலை இந்தப் பேரவைவன்மையாக கண்டிக்கிறது.

நிலையான வாழ்க்கை முறைக்கும், நிலைத்த பாதுகாப்புக்கும் போராடி வரும் இலங்கை அப்பாவித் தமிழ்மக்களை கொன்று குவித்து வரும் போர் நடவடிக்கையை உடனே நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணஇலங்கை அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துவற்புறுத்தியுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் இக் கொடிய கொலை வெறியாட்டத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கலையும்அனுதாபத்தையும் இந்த அவை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

இதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அவையில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடந்தது. அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம்பேசுகையில்,

இலங்கை வாழ் தமிழர்கள் நிம்மதியற்ற சூழலில் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்கவசதியாக சபையின் மற்ற அலுவல்களை ஒத்தி வைக்க தீர்மானம் கொடுத்துள்ளேன்.

சபாநாயகர்: அது எனது ஆய்வில் உள்ளது.

ஜி.கே.மணி (பாமக): சிங்கள ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற செய்தி உலகத் தமிழர்களுக்குஅதிர்ச்சியைத் தந்துள்ளது. சிங்கள ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்தமைக்காக இந்த அவைக்கு பாமக சார்பில்நன்றி தெரிவிக்கிறேன்.

செல்வம் (விடுதலை சிறுத்தைகள்): இந்த இரங்கல் தீர்மானம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி. அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசுமெளனம் சாதிப்பதை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம். (இரு வி.சி. எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்)

கண்ணப்பன் (மதிமுக): இலங்கை எம்பிக்களை இந்தியாவுக்கு அழைத்தோ அல்லது நமது எம்பிக்களை அங்குஅனுப்பியோ நிலவரத்தை நேரில் அறிந்து அதற்கேற் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக விவாதிக்க அதிமுக தந்துள்ள ஒத்தி வைப்பு தீர்மானத்தை நான் வழி மொழிகிறேன்.

சிவுபுண்ணியம் (இ.கம்யூ): இலங்கையில் நடந்த அந்தக் கொலைகளை வன்மையாக கண்டிக்கிறோம். இங்கேஅந்த அப்பாவி குழந்தைகளுக்காக அஞ்சலி செலுத்திய ஆறுதல் அளிக்கிறகு. போரை நிறுத்த முயற்சிமேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்): 61 மாணவிகளை கொன்று குவித்த இலங்கை ராணுவத்தின் செயல் கடும்கண்டனத்துக்குரியது. இதில் மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்.

சுதர்சனம் (காங்): இலங்கையில் விரும்பத்தாக சூழல் உள்ளது. இலங்கை விவகாரம் குறித்து முதல்வருடன் பேசஒரு அரசு அதிகாரியை (எம்.கே. நாராயணன்) மட்டும் மத்திய அரசு அனுப்பி வைத்ததாக விடுதலை சிறுத்தைகள்குற்றம் சாட்டுவது சரியல்ல. இந்திரா காந்தி காலத்தில் பார்த்தசாரதி என்ற அதிகாரி அனுப்பப்பட்டார். அதுபோலதமிழ் தெரிந்த, இலங்கை பிரச்சனையை அறிந்தவர் என்ற முறையில் நாராயணனை பிரதமர் அனுப்பி வைத்தார்.இதில் உள் நோக்கம் ஏதுமில்லை. முதல்வரும் பிரதமரும் இலங்கை பிரச்சனையை உன்னிப்பாக கவனித்துவருகின்றனர்.

கண்ணப்பன் (மதிமுக): முதல்வரும் பிரதமரின் ஆலோசகரான நாராயணனும் பேசியதை இங்கே தெரிவித்தால்நலமாக இருக்கும்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அவர்கள் பேசியது இந்திய அரசின் ரகசியம். அதை வெளியிடுவது நாட்டுக்கும்நல்லதல்ல, இலங்கை தமிழர்களுக்கும் நல்லதல்ல. அதை விவாதிக்காமல் இருப்பதே நல்லது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

திருமா உண்ணாவிரதம்:

இதற்கிடையே தமிழ்ச் சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்தபடுகொலையை கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்தும், விடுதலைச் சிறுத்தைகள்சார்பில் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் அக்கட்சியினர்திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் திருமா பேசுகையில்,

போரில் வீர மரணம் அடைந்தவர்களின் குழந்தைகள், தாய் தந்தையை இழந்தபிள்ளைகள்தான் அந்த இல்லத்தில் தங்கியுள்ளனர் என்று தெரிந்தும் கூட வேண்டும்என்றே இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த கொடுஞ்செயலை, ஈனச்செயலை, மனிதாபிமானமற்ற செயலை இந்திய அரசுகண்டிக்காதது வருத்தம் தருகிறது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுகஉடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி இந்த சம்பவத்தைக் கண்டிக்குமாறு கோரவேண்டும்.

மத்திய அரசு உடனடியாக இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகதில் உள்ள அத்தைன கட்சிகளும் சேர்ந்து சட்டசபையில் இலங்கைஅரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் திருமாவளவன்.

இலங்கைக்கு எம்.பிக்கள் குழு: வைகோ

இதற்கிடையே இலங்கையில் 70 தமிழ் சிறுமிகள் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான உண்மை நிலையை கண்டறிய இலங்கைக்கு எம்.பிக்கள்குழுவை அனுப்ப வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிளிநொச்சி அருகே அப்பாவித் தமிழ்ச் சிறுமிகள் 70 பேர் இலங்கை விமானப் படையினரால் கொடூரமாகக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை ஐ.நா. முதல் பல நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன.

ஆனால் நாங்கள் குண்டு போட்ட இடம் பள்ளிக்கூடம் அல்ல, அனாதை இல்லம் அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் பயிற்சிக் கூடம் என வாய்கூசாமல் பொய் சொல்லியுள்ளது இலங்கை அரசு.

சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த யுனிசெப் அதிகாரிகளே, அப்படி ஒரு பயிற்சி முகாம் அங்கு எதுவும் இல்லை, அதற்கான அறிகுறியே இல்லை என்றுகூறியுள்ளனர். எனவே இலஙகை அரசு சொல்வது பச்சைப் பொய் என்பது தெளிவாகிறது.

மேலும், சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த 17 தமிழ் இளைஞர்களையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. விடுதலைப் புலிகளுக்கானஎதிரான போர் என்று கூறி வந்த இலங்கை அரசு இப்போது அப்பாவித் தமிழர்களை குறி வைத்து தாக்கத் தொடங்கியுள்ளது.

எனவே உடனடியாக இந்திய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு நடக்கும் நிலைமை குறித்து அறிந்துகொள்ள இந்தகுழுவை அனுபப் வேண்டும். இலங்கை அதிபரை இக்குழு சந்தித்து, தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு நர்ப்பந்திக்க வேண்டும்.

இதேபோல இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள் குழுவை இந்தியாவுக்கு வரவழைத்து அவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்.இக்கோரிக்கையை பிரதமரிடம் தெரிவித்துள்ளேன். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+