சிமியுடன் தொடர்பு: கரூர் பேராசிரியர் கேரளாவில் கைது

Subscribe to Oneindia Tamil

அலுவா:

கேரளாவில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வரும் கரூரைச் சேர்ந்த சக்கீர் அஸிம் என்பவரை, சிமி அமைப்புடன் தொடர்புஇருப்பதாக கூறி கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சம்பவத்திற்குக் காரணமான இஸ்லாமிய மாணவர்அமைப்புடன் (சிமி) தொடர்புடையவர்களை போலீஸார் வேட்டையாடி வருகின்றனர்.

இந் நிலையில்,கேரள மாநிலம் அலுவா அருகே புக்கத்துப்பாடி என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும் சக்கீர் அஸிம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பி.டெக் படித்துள்ள இவர் புக்கத்துப்பாடியில் உள்ளபொறியியல் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.

சக்கீரின் சொந்த ஊர் கரூர் ஆகும். முட்டம் பகுதியில் வாடகைக்குவீடு எடுத்து தங்கி வேலை பார்த்துவந்தார். சென்னையில்உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்தபோதே அவருக்கு சிமி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இவர் மீது சென்னை காவல்துறையிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கேரள போலீஸார்தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+