தஸ்லிமா நஸ்ரீன் விசாவை நீடிக்க இந்தியா மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

வங்கதேசத்தைச் சேர்ந்த புரட்சிகர பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு வழங்கப்பட்ட குடியேற்ற விசாவை புதுப்பிக்கஇந்திய அரசு மறுத்துவிட்டது. அதற்குப் பதில் அவருக்கு 6 மாத சுற்றுலா விசாவை இந்திய அரசு வழங்கியுள்ளது.

Taslima Nasrin

1993ம் ஆண்டு லஜ்ஜா என்ற நூலை எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நஸ்ரீன். இந்த நூலுக்கு இஸ்லாமிய அமைப்புகள்நஸ்ரீனை கடுமையாக விமர்சித்தன. அவர் மீது பாத்வா விதிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமறைவு வாழ்க்கைக்கு தாவினார் நஸ்ரீன். கொல்கத்தாவுக்கு தப்பி வந்தார். அன்று முதல்கொல்கத்தாவில்தான் அவர் வசித்து வருகிறார். இங்கும் கூட அவருக்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் அவ்வப்போதுமிரட்டல்கள் இருந்து கொண்டே உள்ளன.

குடியேற்ற விசா மூலம் நஸ்ரீன் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கிறார். தனக்கு இந்தியக்குடியுரிமை வழங்க வேண்டும்என்று நஸ்ரீன் கோரி வருகிறார். இதுதொடர்பாக அவர் விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால் அவருக்கு குடியுரிமை வழங்கமத்திய அரசு மறுத்து விட்டது.

மேலும், அவரது குடியேற்ற விசாவும் புதுப்பிக்கபப்டவில்லை. மாறாக 6 மாத காலம் மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும்சுற்றுலா விசா நஸ்ரீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நஸ்ரீன் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அரசு இப்படிச் செய்யும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதுபெரும் அதிர்ச்சியாக உள்ளது. நான் பிரச்சினையில் சிக்கியபோது இந்தியாதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தது. இதையும்எனது தாய் நாடாக நான் கருதி வாழ்ந்து வந்தேன். இந்த மண்ணை எனது மண்ணாக மனதளவில் ஏற்றுக் கொண்டு விட்டேன்.

ஆனால் இப்போது எல்லாமே தகர்ந்து விட்டது. என்னை ஒருசுற்றுலா பயணி அளவுக்கு சுருக்கி விட்டார்கள். எப்போதுவேண்டுமானாலும் என்னை இந்தியா வெளியேற்றலாம். ஏன் இப்படி சுற்றுலா விசா வழங்கினார்கள் என்பது புரியவில்லை.இதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து எனக்குத் தெரியாது.

எனது எதிர்காலம் நிலையற்றதாக மாறியுள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார் 44 வயதாகும் நஸ்ரீன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+