ஏமாற்றி விட்டார் கரோலின் -கண்ணன் புலம்பல்!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் மீதும் ஏட்டு மகள் கரோலின் பாண்டிச்சேரிகாவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளார்.
![]() |
| போலீஸ் பிடியில் கோவி கண்ணன் |
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் தங்கவேலுவின் மகள்கரோலின். இவரை திரைப்பட பைனான்சியர் கோவி. கண்ணன் கடத்திச் சென்று, தனதுவீட்டில் அடைத்து வைத்து கிட்டத்தட்ட 2 வாரங்கள் கற்பழித்து பின்னர் கட்டாயக்கல்யாணம் செய்து கொண்டார்.
இதையடுத்து கரோலினின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ்மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து கரோலின் மீட்கப்பட்டார். இந்த கட்டாயக்கல்யாணம் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மைலாப்பூர் எஸ்.ஐ.முருகேசன், ஏட்டு உதயகுமார், போலீஸ்காரர் சந்திரன், பெண் போலீஸ் செந்தாமரைச்செல்வி ஆகிய நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
![]() |
கோவி.கண்ணனை நேற்று முன் தினம் உடுமலைப்பேட்டையில் கைது செய்தனர்.நேற்று அவரை சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந் நிலையில்கரோலின் புதுச்சேரி காவல் துறைக் கண்காணிப்பாள>டம் புகார் மனு ஒன்றைகொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
சென்னை மைலாப்பூரில் வசித்து வரும் சினிமா பைனான்சியர் கோவி.கண்ணன்என்னையும், என் பெற்றோரையும் மிரட்டினார். என்னை மிரட்டி துன்புறுத்தி என்னைஅடைய முயன்றார். இதனால் பயந்து போன நானும் என் பெற்றாேேரும்சென்னையை விட்டு புதுச்சேரி வீராம்பட்டினத்தில் குடியேறினோம்.
ஆனால் கோவி.கண்ணன் புதுச்சே>க்கும் வந்து விட்டார். எங்களை நிம்மதியாக வாழவிடவில்லை. இதனால் எங்களை காப்பாற்றும்படி வீராம்பட்டினம் பகுதி மக்களிடம்கேட்டுக் கொண்டோம். அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். இதனால் சிலகாலம் பிரச்சனை இன்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தோம்.
இந் நிலையில் சில நாட்கள் கழித்து வந்து கோவி.கண்ணன் மைலாப்பூர் காவல்நிலையத்தில் என்னுடைய பெற்றோர்கள் மீது மோசடி புகார் கொடுத்தார். அந்தபுகாரின் மீது போலியான ஒரு எப்ஐஆர் தயார் செய்து எடுத்து வந்தார்.
அதை வைத்து எங்களை 06.05.2006 அன்று கைது செய்தார்கள். இதற்குஅரியாங்குப்பம் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் ஆறுமுகம்உதவினார்.
ஆனால் அன்று எங்களுடைய வழக்கறிஞர் வந்து இது பொய்யான எப்ஐஆர் என்றுகண்டு பிடித்து தந்ததின் காரணமாக எங்களை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.ஆனால் கண்ணன் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் பொழுதுதெல்லாம் உதவிஆய்வாளர் ஆறுமுகமும் அவருடன் சேர்ந்து கொண்டு வெளிப்படையாக உதவிசெய்தார்.மேலும் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபொழுதெல்லாம்கோவி.கண்ணனிடம் சென்று விடு இல்லையென்றால் நாங்களே உங்கள் மீதுகோவி.கண்ணனிடம் புகாரினை பெற்று உங்கள் மீது வழக்கு போடுவோம் என்றுமிரட்டினார்.
06.07.2006 அன்று எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் பொழுது உதவிஆய்வாளர் ஆறுமுகம் தமிழ்நாடு காவலர்களுடன் என்னுடைய வீட்டிற்கு வந்தார்.காலை 6.30 மணிக்கு எங்களை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு அரியாங்குப்பம்காவல் நிலையத்துக்கு போகாமல் சென்னைக்கு அழைத்து சென்றார்கள்.
எனவே முதல்முதலில் மைலாப்பூர் போலீசார் கொண்டு வந்தது போலி எப்ஐஆர்என்று உதவி ஆய்வாளர் ஆறுமுகத்துக்கு தெரிந்தபோதே அவர்கள் மீது நடவடிக்கைஎடுத்திருந்தால் எனக்கு இந்தக் கொடுமையே நடந்திருக்காது.எனவே என்னுடைய பாதிப்புக்கு அரியாங்குப்பம் உதவி ஆய்வாளர் ஆறுமுகமும்ஒரு காரணம்.
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் எனக்கும் என்னுடையகுடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் எனமனுவில் கூறிப்பிட்டுள்ளார்.
கோவி.கண்ணன் புலம்பல்:
இதற்கிடையில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவி.கண்ணன்தன்னை கரோலின் ஏமாற்றி விட்டார் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவரது வாக்குமூல விவரம்:
நான் பெ>ய ஆளாக ஆக வேண்டும் என்ற ஆசையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்சென்னை வந்தேன். சினிமாவுக்கு பாடல் எழுத பிரபல கவிஞரிடம் 2 ஆண்டுகள்உதவியாளராக இருந்தேன். பின்னர் நான் தனியாக சினிமாவுக்கு பாடல்எழுதியுள்ளேன்.
2005ம் ஆண்டு விஜயகுமார் என்ற சினிமா செய்தி தொடர்பாளர் எனக்குஅறிமுகமானர். அப்போது தான் மனதில் கொஞ்சம் இடம் வேண்டும் என்ற படத்தில்அமிர்தா என்ற பெயரில் கரோலின் அறிமுகமானாள். அந்த படத்தில் நடித்த கரோலின்போட்டோக்களை விஜயகுமார் என்னிடம் காட்டினார்.
நான் படம் எடுக்கும்போது அவரை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று சொன்னேன்.அதே நேரத்தில் பாண்டியன் என்பவர் மூலம் கரோலினின் தாயார் கிரேசி எனக்குஅறிமுகமானார். அந்த பழக்கத்தில் நான் கரோலின் வீட்டுக்கு சென்று வந்தேன்.அவர்களிடம் நான் சினிமா படம் எடுக்க உள்ளேன். என்னிடம் ரூ. 30 லட்சம் உள்ளது.பெங்களூரில் உள்ள பைனான்சியர் ஒருவர் ரூ. 40 லட்சம் தருகிறேன் என்றுகூறியுள்ளார் என்றேன்.
கரோலின் படத்தில் நடிப்பதற்கு முன் பணமாக ரூ.15,000 கிரேசியிடம் கொடுத்தேன்.பெங்களூர் பைனான்சியரை பார்பதற்காக அவரிடம் 10 நாட்கள் தங்க வேண்டும்.அங்கு அவர் விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதற்குகரோலின் மறுத்து விட்டார். அதனால் அந்த சினிமா தயா>ப்பு திட்டம்கைவிடப்பட்டது.
கரோலின் குடும்பத்துக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. அவர்கள்கேட்டபோதெல்லாம் நான் பண உதவி செய்தேன். ஒருநாள் கிரேசி என்னிடம் வந்துஎனது தம்பி ஜேம்ஸ் கரோலினை திருமணம் செய்து தரும்படி வற்புறுத்தினான்.அவனிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் வாங்கியுள்ளேன். அவனுக்கு ஏற்கனவேதிருமணம் ஆகிவிட்டது. 2ம் தாரமாக கரோலினை திருமணம் செய்து தரும்படிவற்புறுத்தி வருகிறான்.
அவனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.1 லட்சம் நீங்கள் கொடுத்தால் அவனிடம் இருந்துநாங்கள் தப்பித்துக் கொள்ள முடியும் என்று கெஞ்சினார்.
அந்த பணத்தை நான் கொடுத்தேன். அப்போது எனது நடவடிக்கைகளை பார்த்துகரோலினை என்னை திருமணம் செய்து கொள்ளும் படி கிரேசி கூறினார். எனக்குஏற்கனவே உறவுப் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண்என்னை விட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காசென்றார்.
அந்த வேதனையில் இருந்த நான் கரோலினை திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தேன். கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி மேற்கு மாம்பலத்தில் உள்ள வக்கீல்சொர்ணலதா வீட்டில் கரோலினை திருமணம் செய்து கொள்வதற்காக பேச்சு வார்த்தைநடந்தது.
இதில் கரோலின், கிரேசி, கரோலின் தந்தை தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதன் பின்பு கிரேசி அடகு கடையில் உள்ள நகைகளை மீட்கவும் இருக்கிறகடன்களை அடைக்கவும் கடன் கேட்டார். அப்போது மேலும் ரூ.2 லட்சம்கொடுத்தேன். ஆனால் கிரேசி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து விடும்படிகூறினார்.
நான் சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் நடந்தது. திருமண தேதியும்நிச்சயிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளுக்காக நான் 18.02.2006 அன்று கரோலின்வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. ஏற்கனவே எனக்குஅறிமுகமாகியிருந்த பாண்டியனிடம் விசாரித்தேன்.
அவர்கள் நெசப்பாக்கம் சென்று விட்டதாக கூறினார். இதனால் 21.02.2006 அன்றுபோலீஸ் கமிஷன>டம் கரோலின் குடும்பத்தினர் மீது நான் புகார் கொடுத்தேன்.அவர்கள் போலீசார் அழைத்து விசாரித்தனர். என்னிடம் வாங்கிய பணத்தை 1மாதத்தில் திருப்பி தருவதாக எழுதிக் கொடுத்தார்.
ஆனால் 1 மாதம் கழித்தும் பணத்தை திருப்பித் தரவில்லை. அவர்கள் புதுச்சேரிக்குதப்பி ஓடி விட்டனர். இது பற்றி சென்னை இணை கமிஷனர் கருணாசாகரிடம் நான்புகார் செய்தேன். அதன் பிறகு 4 மாதங்களாகியும் எனக்கு பணம் தரவில்லை.
17.05.2006ம் தேதி வக்கீல் ஆனந்தன் மூலம் ரூ. 9,000 கொடுத்தனர். மீதிபணத்துக்காக கடந்த மாதம் மைலாப்பூர் துணை கமிஷனர் மெளரியாவிடம் புகார்கொடுத்தேன். அதன் பேரில் போலீசார் புதுச்சேரிக்குச் சென்று கரோலினை அழைத்துவந்தனர். மீதி பணத்தை கொடுக்க முடியாததால் கரோலினை திருமணம் செய்து கொள்என்று கிரேசி கூறினார்.
இந் நிலையில் கோடம்பாக்கம் என்ற படத்தின் தயாரிப்பாளர் செவ்வேல், கரோலின்குடும்பத்துக்கு அறிமுகமானார். அவ>டம் இருந்து ரூ. 2 லட்சத்தை கிரேசியின் வக்கீல்ஆனந்தன் வாங்கினார். அதில் ரூ. 80,000 மட்டும் என்னிடம் கொடுத்தார். கரோலினைதிருமணம் செய்து கொள்வதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.
அனால் வக்கீல் சொர்ணலதா வீட்டில் கிறிஸ்தவ முற்ைபடி மோதிரம் மாற்றி திருமணம்செய்து கொண்டோம். எங்கள் வழக்கப்படி திருமணம் செய்து கொள்வதற்காகமதுரையில் உள்ள எனது ஊருக்கு அழைத்து சென்றேன். அங்கு எனது உறவினர்கள்கரோலினிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டனர்.
அதற்கு கரோலின் சம்மதம் தெரிவித்தார். நான் அவரை கடத்தவில்லை.கட்டாயப்படுத்தி கற்பழிக்கவும் இல்லை. கரோலினின் முழுச் சம்மதத்துடன்தான்முதலிரவு நடந்தது. கரோலினை என்னிடம் அறிமுகப்படுத்தும் போது ரேஷன் கார்டைகாட்டி 21 வயதாகிறது என்று தான் சொன்னார்கள்.
அவர் மைனர் பெண் என்பது எனக்கு தெரியாது. அவரது பெற்றோர் சொன்னதைநம்பித்தான் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
இந்த பிரச்சனைக்கு முன்பாகவே கரோலின் என்னுடன் பழனி வந்து 3 மாதம் தங்கிஇருந்தார். எனது அண்ணன் ராஜகோபால் இருதய நோயாளி, அவருக்கு உதவிசெய்வதற்காகவே நானும் கரோலினும் 3 மாதம் அங்கு சென்றிருந்தோம். அதன் பிறகு5.9.2006ம் தேதி எனது சகோதரியின் மகன் திருமணம் எனது சொந்த ஊரில் நடந்தது.அந்த திருமணத்திறக்கு கரோலினும வந்திருந்தார்.
அந்த திருமணத்திலேயே எனது உறவினர்களிடம் கரோலினை திருமண் செய்துகொள்வதாக நான் கூறினேன். அந்த திருமணத்தில் கரோலின் கலந்து கொண்டபுகைப்படங்களும் என்னிடம் உள்ளன.
இவ்வாறு கோவி கண்ணன் கூறுயுள்ளார்.
இந் நிலையில் கோவி கண்ணனுக்கு ஆண்மை பரிசோதனை செய்வற்காக இன்றுநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த அனுமதி கடிதம் இன்று ஜெயில்அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பிறகு அவருக்கு ஆண்மை பரிசோதனைநடைபெறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications