முதல்வருக்கு திரையுலகின் பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திரையுலகுக்கு பல்வேறு சலுகைகளை அளித்ததற்காக திரையுலகின் பல்வேறுசங்கஙக்ள் ஒன்று சேர்ந்து செப்டம்பர் 23ம் தேதி பாராட்டு விழா நடத்தவுள்ளன.இதையொடடி 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறாதுஎன அறிவிக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் பாராட்டுவிழா நடத்துவது குறித்துவிவாதிப்பதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஆலோசனைக் கூட்டம்நடந்தது.
அதன்பின்னர் விழாக்குழுத் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர்ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகமுதல்வர் அறிவித்த வரிச்சலுகையால், சிறு முதலீட்டுப் படங்களைத் திரையிட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதே போல படப்பிடிப்புக்கான கட்டணங்களையும் வெகுவாக குறைத்துள்ள தால்திரையுலகின் அனைத்துப் பிரிவினரும் சந்தோஷமடைந்துள்ளனர். இதையடுத்துதமிழ்த் திரையுலகம் சார்பாக இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும்பல்வேறு சங்கங்கள் இணைந்து வருகிற செப்டம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்குசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்தமுடிவாகியுள்ளது.
![]() |
விழாவை சிறப்பாக மேற்கொளள பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகர்சங்கம் சார்பில் சத்யராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும், திரைப்படதொழிலாளர் சம்மேளனம் சார்பில் பெப்சி விஜயன் தலைமையிலும்,விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் அருள்பதி தலைமையிலும், திரையரங்கஉரிமையாளர்கள் சங்கம் சார்பில் அபிராமி ராமநாதன், அண்ணாமலைதலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
![]() |
விழாவையொட்டி 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களும் படப்பிடிப்புகளை ரத்துசெய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சிறப்பு விழா மலரும் இந்த விழாவின் போது வெளியிடப்படும்என ராம.நாராயணனும், எஸ்.ஏ.சந்திரசேகரும் தெரிவித்தனர்.
![]() |
இக்கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், அப்பாஸ், சார்லி, நடிகை ஸ்ரீபிரியா,தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர் சம்மேளனபிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications