தந்திரி வழக்கு-போலீஸ் பிடியில் மலையாள நடிகர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

Shoba

சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனருவை அழகி சாந்தாவுடன் ஆபாசகோலததில் இருக்க வைத்து படம் எடுத்து பணம் பறிக்க முயன்ற வழக்கில்தேடப்பட்டு வந்த மலையாள நடிகர் பைஜூ ரஹ்மான் போலீஸ் பிடியில்சிக்கிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே ஷோபாவும், அவரது கூட்டாளிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை வரும் செப்டம்பர் 11ம் தேதி வரை போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமனறம் அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து 3 பேரையும காசர்கோடு, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்டஇடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

இந் நிலையில் அழகி ஷோபாவுக்கு இந்தத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்த மலையாளநடிகர் பைஜூ ரஹ்மான் தலைமறைவாக இருந்து வந்தார். இப்போது அவர் போலீஸ்பிடியில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Pechu Rahman

பைஜூ ரஹ்மான் டிவி, சினிமாவில் நடித்ததோடு வெள்ளி மணிசாலம் எனறபடத்தையும் தயாரித்துள்ளார். இவரது உண்மையான பெயர்அப்துல் ரஹ்மான். சொந்தஊர் காசர்கோடு அருகே உள்ள மயூர்சூரி கிராமம்.

மஸ்கட், ஈரானில் சில காலம் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மஸ்கட்டில்மலையாள சினிமா நடிகர், நடிகையரின் கலை நிகழ்ச்சிகளை நடத்தியபோதுநடிகைகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன் கொச்சியில் செட்டிலாகி, திரைப்படத்தயாரிப்பில் ஈடுபட்டதோடு நடிக்கவும் செய்தார். அப்போது நடிகை ஒருவருடன்குடும்பம் நடத்தத தொடங்கியதால் ரஹ்மானின் மனைவி பிரிந்து சென்றார்.

விபச்சாரப் பெண் ஷோபாவுக்கும், ரஹ்மானுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம்இருந்தது. காக்கநாடு மாவேலிபுரம என்ற இடத்தில் 2 மாடி பங்களாவை விலைக்குவாங்கி அங்குதான் விபச்சார அழகிகளை தங்க வைத்து அவர்களை அனுப்பி தொழில்செய்து வந்தார் பெச்சு ரஹ்மான்.

ஷோபாடவிடம் தொழில நடத்திய விபச்சார அழகிகளும் இங்கு தான்தஙகியிருந்தனராம்.

இதுதவிர நீலப்படம் எடுத்தும் சம்பாதித்து வந்தார் ரஹ்மான். அவரது வீடுகளில்போலீஸார் ஏற்கனவே சோதனை நடத்தி நீலப்பட சிடிககளை கைப்பற்றியுள்ளனர்.தலைமறைவாக இருந்த ரஹ்மான் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

ரஹ்மான் ஏற்கனவே சுப்ரீம் மில்க் பால் வினியோக நிறுவனத்தை நடத்தி வந்தார்.அப்போது சென்னையில் காசோலை மோசடியில் அவர் சிக்கினார். இதுதொடர்பாகசென்னை போலீஸார் 2முறை கேரளா வந்து விசாரணை நடத்தியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+