விமான பயணிகள்-முழு விவரம் கேட்கும் அமெரிக்கா
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கு வரும் விமானங்களில் பயணம் செய்வோர் குறித்த கூடுதல்விவரங்களை சேகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்க உள்நாட்டுபாதுகாப்புத் துறை அமைச்சர் செர்டாப் கூறியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் செர்டாப் எழுதியுள்ள கட்டுரையில்,தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் ஐரோப்பிய நாடுகள் மிகுந்தஒத்துழைப்பு அளிக்கின்றன. இருப்பினும் விமான பயணிகள் குறிதத் விவரங்கள்இன்னும் கூடுதலாக இருந்தால் நலமாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
ஆனால் தற்போது ஐரோப்பிய நாடுகளின் சில கொள்கைகள் இதற்கு இடையூறாகஉள்ளன.
பயணிகள் விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போதே அவர்கள்குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஏடிஎம்ட்கார்டுகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தெரிய வந்தது.
இத்தகைய தீவிரவாதிகளை விமானத்தில் ஏறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவதுதான்புத்திசாலித்தனம். எனவே பயணிகள எங்கிருந்து புறப்படுகிறார்கள், அவர்கள்டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்திய முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களைசேகரித்து அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்செர்டாப்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து அமெரிகக்காவுக்கு வரும் பயணிகளின் பெயர்,முழு முகவரி, டிக்கெட் கட்டணமுறை உள்ளிட்ட தகவல்களை அமெரிக்காவுக்குஐரோப்பிய யூனியனின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந் நிலையில்தான் செர்டாப் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை செல்லாததாக்க புதிய சட்டம் ஒன்றை ஐரோப்பிய யூனியன் செப்டம்பர்30ம்தேதிக்குள் கொண்டு வர தயாராகி வருகிறது.












Click it and Unblock the Notifications