இலங்கை தமிழ் எம்.பிக்கள் வைகோவுடன் சந்திப்பு
சென்னை:
இலங்கையிலிருந்து வந்துள்ள ஐந்து தமிழ் எம்.பிக்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்துப்பேசினர்.
இலங்கையிலிருந்து ஐந்து பேர் கொண்ட தமிழ் எம்.பிக்கள் குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில்ஆர்.சம்பந்தன், எம்.கே.சிவாஜி லிங்கம், மாவை சேனாதிராஜா, பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார்பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழுவினர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது கட்சித் தலைமையகத்தில் சந்தித்து சுமார் 2மணி நேரம் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க தமிழ் எம்.பிக்கள் வந்துள்ளனர். பிரதமர் வெளிநாடு போகிறார்.எனவே அவர் வந்தவுடன் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இலங்கைக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் மீது இலங்கை அமைச்சர் அனுரா பண்டாரநாாயகேதேவையில்லாமல் புகார் கூறியுள்ளார் நிரூபமா ராவ் தனது அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட்டு வருகிறார். அவர்மீதான புகார் அவசியமற்றது என்றார் வைகோ.
பின்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பேசுகையில், சொந்த விஷயமாக தமிழகம் வந்துள்ளோம்.தமிழக தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். பிரதமர் வெளிநாடு போவதாக கூறியுள்ளனர். எனவேவிரைவில் அவரை சந்திப்போம்.
இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்புடைய வகையில் இந்திய முடிவெடுக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.முதல்வர் கருணாநிதியையும் நேற்று ஜந்திக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் முதல்வருக்கு வேறுஅலுவலகள் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.
பிரதமர், முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்திக்க தமிழ் எம்.பிக்கள் குழுதிட்டமிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications