வயதான தலைவர்களை மதியுங்கள்: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்:

வயதான தலைவர்களை புறக்கணிக்கக் கூடாது. மாறாக அவர்களது அனுபவங்களைமதிக்க வேண்டும் என பாஜக தலைமைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவுரைகூறியுள்ளார்.

டேராடூனில் நடந்து வரும் பாஜக செயற்குழுக் கூட்டததின் போது இந்தக் கருத்தைவெளியிட்டார் வாஜ்பாய். கூட்டத்தில் அவர் பேசுகையில, பாஜகவில் அடுத்தடுத்துபல மூத்த தலைவர்கள் வெளியேறி வருகிறார்கள் அல்லது வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.

இது தவறானதாகும். வயது காரணமாக யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. வயதுஆக ஆகத்தான் புத்தி கூர்மையடையும். அவர்களது அனுபவம் கட்சியை சிறந்தமுறையில் வழி நடத்த உதவும். இதை பாஜக தலைமை மறந்து விடக்கூடாது.

வயது ஆகி விட்டது என்பதற்காக யாரையும் குப்பைக் கூடையில் தூக்கிப் போடட்விடக் கூடாது என்றார் வாஜ்பாய். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,கட்சியின் பல தலைவர்களுக்கு வயதாகி வருகிறது. எனவே அவர்கள் பதவிவிலகுவது நல்லது என்று குறிப்பிட்டதால் அதிருப்தி அடைந்த வாஜ்பாய் மேற்கண்டகருத்தைக் கூறினார்.

வாஜ்பாய் அதிருப்தி அடைந்ததை உணர்ந்த ராஜ்நாத் சிங் எழுந்து, மூத்ததலைவர்களை புறக்கணிக்கும் வகையில் நான் அப்படிப் பேசவில்லை. கட்சியின்மூத்த தலைவர்களின் அறிவுரையை, வழிகாட்டு தலை கட்சித் தலைமை கண்டிப்பாகபுறக்கணிக்காது, மதித்து நடக்கும் என்றார்.

வாஜ்பாய் பேச்சினால் கூட்டத்தில் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+