குழந்தையை கொன்று புதைத்த கள்ளக் காதல் ஜோடி
சென்னை:
வலிப்பு வந்ததாக கூறி 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்த அவரது தந்தை மற்றும்தந்தையின் கள்ளக் காதலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் ஜெயசிங். லாரி டிரைவரான இவர் வந்தவாசியில் வேலை பார்த்துவந்தார். அப்போது செல்வி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மல்லிகா என்ற 8வயது மகள் இருந்தார்.இந்த நிலையில் ஜெயசிங்கிற்கு, சரோஜினி என்ற பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்துகொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர். செல்வி வள்ளியூரில் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜெயசிங்கின் தங்கை அந்தோணியம்மாள், குழந்தை மல்லிகாவுடன் கொளப்பாக்கம் வந்தார்.பின்னர் குழந்தையை ஜெயசிங்கிடம் விட்டு விட்டு அவர் போய் விட்டார். சில நாட்களிலேயே குழந்தை மல்லிகாவலிப்பு வந்து இறந்து விட்டதாக செல்விக்கு தகவல் கொடுத்தார் ஜெயசிங்.
ஆனால் செல்வி வருவதற்குள்ளாகவே மல்லிகாவின் உடலை புதைத்து விட்டார். இதனால் ஊருக்கு வந்த செல்விதனது குழந்தையின் மரணம் குறித்து சந்தேகப்பட்டார். மேலும், அவருக்கு சரோஜினியுடன், ஜெயசிங்கிற்குஇருந்த கள்ளத் தொடர்பும் தெரிய வந்தது.
இதையடுத்து மாங்காடு போலீஸில் புகார் கொடுத்தார் செல்வி. ஆனால் போலீஸார் வழக்கை சரியாகவிசாரிக்காமல், கோப்பை மூடி விட்டனர். இதையடுத்து உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்செல்வி.
இதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரது முன்னிலையில் மல்லிகாவின் உடல்தோண்டு எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இதில் குழந்தை மல்லிகா வலிப்பு நோயால்சாகவில்லை, கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயசிங், சரோஜினி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சரோஜினி கர்ப்பமாகஇருந்ததும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு, மல்லிகாவால் எதிர்காலத்தில் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக கொலை செய்து விட்டதாக சரோஜினி ஒத்துக் கொண்டார்.
சரோஜினி கொலை செய்ததையடுத்து அவருடன் சேர்ந்து தனது மகளின் பிணத்தை புதைத்து விட்டதாகஜெயசிங்கும் ஒத்துக் கொண்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications