காவல் நிலையத்தில் கர்நாடக அமைச்சர் ரகளை!
பெங்களூர்:
பெங்களூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த கர்நாடக மாநில சிறுசேமிப்புத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடாஇன்ஸ்பெக்டரை கடுமையாக திட்டி ரகளை செய்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சிறுசேமிப்பு துறை மற்றும் திட்டத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடா. கிராமப் பஞ்சாயத்துஉறுப்பினரான இவரது ஆதரவாளர் நாகராஜ் என்பவர் மீது நிலத்தகராறு காரணமாக பெங்களூர் சுப்ரமணியபுராகாவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இதையடுத்து விசாரணைக்கு வருமாறு இன்ஸ்பெக்டர் சிவண்ணா, நாகராஜுக்கு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர்தன்னை விசாரணைக்கு வருமாறு கூப்பிடுவதாக அமைச்சரிடம் கூறினார் நாகராஜ்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ வர முடியாது என்று கூறி விட்டார்.
இதனால் கோபமடைந்த கவுடா, சினிமா வில்லன் கணக்கில் காரை எடுத்துக் கொண்ட நேராக காவல்நிலையத்திற்கு வந்தார். அவருடன் அவரது உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி, ஏராளமான தொண்டர்களும்வந்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவண்ணாவைப் பார்த்து கோபமான குரலில், நான் கூப்பிட்டால் வர முடியாதா? நீ என்ன பெரியஆளா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் உத்தரவிட்டால் உங்க கமிஷனரே கையைக் கட்டிக்கொண்டு என் முன் நிற்பார். நீயெல்லாம் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர். நான் சொன்னால் மதிக்க மாட்டாயா?
இனிமேல் எங்களது கட்சிக்காரர்களுக்கு எதிராக நீ செயல்படுவதாக உன் மீது புகார் வந்தது, அவ்வளவு தான்ஜாக்கிரதை என்று முழங்கியுள்ளார்.
அமைச்சரின் வேகத்தைப் பார்த்து விதிர்த்துப் போன அந்த அப்பாவி இன்ஸ்பெக்டர், அய்யா, இது சிவில்மேட்டர். இதில் எல்லாம் தலையிடக் கூடாது என்று உயர் அதிகாரிகள் எனக்கு உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இதுதொடர்பாக நீதிமன்றத்திற்குப் போங்கள் என்று இரு தரப்பினரையும் அறிவுறுத்தவே அழைத்தேன்என்று கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் கேட்கும் நிலையில் அமைச்சர் இல்லையாம். வந்தவர் வேகமாகதிட்டித் தீர்த்து விட்டு எடுடா வண்டியை என்று துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பிப் போய் விட்டாராம்.
பெங்களூர் காவல்துறை வட்டாரத்தில் மட்டுமல்லாது கர்நாடகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கவுடாவிடம் கேட்டபோது, நான் காவல் நலையம் சென்றதுஉண்மைதான். சிவண்ணாவை எனக்கு முன்பே தெரியும்.
எனது வீட்டுக்கு வருமாறு கூறியிருந்தேன். அவர் பிசியாக இருந்ததால் வர முடியவில்லை. எனவே நான் அந்தப்பக்கமாக போகும்போது சிவண்ணாவைப் போய் பார்த்தேன் என்றார். காவல் நலையத்தில் எப்படிப் பேசினேன்என்பதை மட்டும் அமைச்சர் கவுடா விளக்க மறுத்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து திட்டு வாங்கியதாக கூறப்படும் இன்ஸ்பெக்டர் சிவண்ணாவும், காவல் நிலையத்தில் உள்ளமற்றவர்களும் வாய் திறக்க மறுத்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications