8 நக்சலைட்டுகள் சென்னையில் ஊடுறுவல்?
சென்னை:
ராக்கெட் லாஞ்சர் தயாரிக்க ஆர்டர் கொடுத்த நக்சலைட் ரகு போல மேலும் 8 நக்சலைட்டுகள் சென்னைக்குள்ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களைப்பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்பட்டு அவைஆந்திராவில் உள்ள நக்சலைட்டுகளுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட் லாஞ்சர்களை தயாரிக்க ஆர்டர் கொடுத்தது மக்கள் போர்க்குழு என்றநக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ரகு மற்றும் அவரது மனைவி சுதாராணி என்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஏஜென்ட் வீரபத்திர ராவ் மற்றும் ராக்கெட்லாஞ்சர்களை தயாரித்துக் கொடுத்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் 6 பேரைசமீபத்தில் போலீஸார் கைது செய்தனர்.
தலைமறைவாகியுள்ள ரகு, சுதாராணியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் , ரகுவைப்போல மேலும் 8 முக்கிய நக்சலைட்டுகள் சென்னையில் ஊடுறுவியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்துள்ளது. மத்திய உளவுப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல் சென்னை போலீஸாருக்குதெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட சில இடங்களில் இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத்தங்கியிருந்ததாகவும் உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த 8 பேரும் சென்னைக்குள்ஊடுறுவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மத்திய உளவுப் பிரிவு போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications