கலாம் மீது புகார்: பெர்னாண்டஸுக்கு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆயுத பேர வழக்கில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையும் விசாரிக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளதற்கு இடது சாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிடமிருந்து பாரக் ரக ஏவுகணைகளை வாங்கியதில் ரூ. 2 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறிமுன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், இது சோனியா காந்தியின் தூண்டுதலின் பேரில்போடப்பட்டுள்ள வழக்கு. பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக முன்பு அப்துல் கலாம் இருந்தபோது அவர்தான்இந்த ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து பாரக் ஏவுகணைகள் வாங்கப்பட்டதாககூறியிருந்தார்.

பெர்னாண்டஸின் இந்த பேச்சுக்கு இடது சாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோஷலிச கட்சி ஆகியவை இதுதொடர்பாக வெளியிட்டுள்ளகருத்து:

ஜார்ஜ் பெர்னாண்டஸ், கெளரவமானவராக இருந்தால், சட்டப்படியான நடவடிக்கையை சந்தித்திருக்கதுணிந்திருக்க வேண்டும். அதை விடுத்து குடியரசுத் தலைவரையும், சோனியா காந்தியையும் இப்பிரச்சினையில்இழுத்திருக்கக் கூடாது.

குடியரசுத் தலைவர் அனைவராலும் மதிக்கப்படக் கூடியவர். அவர் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டத்துணிந்து விட்டார் பெர்னாண்டஸ். இதேபோல தேவையில்லாமல் சோனியாவின் பெயரையும் அவர்இழுத்துள்ளார் என்று அவை கூறியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் கூறுகையில், விரக்தியால் குடியரசுத் தலைவர்பெயரையும், சோனியா பெயரையும் தேவையில்லாமல் வம்புக்கிழுத்துள்ளார் பெர்னாண்டஸ் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோக்சபா தலைவர்களான பாசுதேவ் ஆச்சாரியா, கம்மது சலீம் ஆகியோர்விடுத்துள்ள அறிக்கைகளில், யாருமே உதவிக்கு வராத அளவுக்கு பெர்னாண்டஸ் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார். எனவேதான் குடியரசுத் தலைவர் மீதும், சோனியா காந்தி மீதும் பழி போட முனைகிறார் என்றுகூறியுள்ளனர்.

பார்வர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் கூறுகையில், நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத்தலைவர் பதவிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் பெர்னாண்டஸ். பாஜக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நடந்த அத்தனை பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களையும்முழுமையாக, விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுப்ரமணியம் சுவாமி ஆதரவு:

இந்த நலையில், பெர்னாண்டஸுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கருத்துதெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெர்னாண்டஸ் மீதான முதல் தகவல்அறிக்கை கேலிக்குரியதாகும். சோனியாவின் உத்தரவுப்படியே பெர்னாண்டஸ் மீது முதல் தகவல் அறிக்கைபதிவாகியுள்ளது.

பாரக் ஏவுகணைகளை வாங்குவது பெர்னாண்டஸ் எடுத்த தனிப்பட்ட முடிவு கிடையாது. மத்திய அமைச்சரவைஎடுத்த கூட்டு முடிவு. அதற்கு பெர்னாண்டஸ் மட்டும் பொறுப்பேற்க முடியும் என்று கேட்டார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+