வெற்றி வாய்ப்பு பிரகாசம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக சென்னை மாநகராட்சிதேர்தலில் ஓட்டு போட்ட பின்னர் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. சென்னை மாநகராட்சித்தேர்தலில் முதல்வர் கருணாநிதி வாக்களித்தார்.காலை 9.10 மணிக்கு கோபாலபுரம் சாரதா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் ஓட்டு போட்டார்.அவருடன் மனைவி தயாளு அம்மாள், அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் வாக்களித்தனர்.
அவர்களுக்கு சில நிமிடங்கள் முன்னதாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது மனைவி பிரியாவுடன் வந்துவாக்களித்தார். வாக்களித்து விட்டு வெளியே வந்த முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
திமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டு வெற்றி பெற முயற்சிப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து கேட்டபோது,தோல்விக்கு அவர் தேடும் காரணம் அது என்றார்.












Click it and Unblock the Notifications