கள்ள ஓட்டு: வாக்களிக்க முடியாத சு.சுவாமி!
சென்னை:
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டதால்சுவாமியால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு இன்று நடந்த தேர்தலில் பரவலாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன. பெரும் வன்முறைமற்றும் அமளிக்கு மத்தியில் நடந்து வரும் தேர்தலில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் ஓட்டேகள்ள ஓட்டாக போடப்பட்டு விட்டதால் சுவாமியால் வாக்களிக்க முடியாமல் போனது.இதுகுறித்து தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரலேகா கூறுகையில், டாக்டர் சுவாமிக்கு 146வது வார்டில்வாக்கு உள்ளது. இன்று காலை பூத் எண் 2281க்கு அவர் வாக்களிக்கச் சென்றார்.
ஆனால் அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு விட்டதாகவும், இப்போது வாக்களிக்க முடியாது எனவும்அங்கிருந்தவர்கள் கூறினர். அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டனர்.
இதனால் கோபமடைந்த சுவாமி, அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடம் எனது ஓட்டையே கள்ள ஓட்டாக போட்டுவிட்டனர். இதை எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள் என்று வாதிட்டார். ஆனால் அவர்கள் உரிய பதிலைத்தரவில்லை.
நான் 150வது வார்டில் எனது வாக்கை செலுத்த சென்றபோது எனது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்தபின்னர் தான் அலுவலர்கள் என்னை வாக்களிக்க அனுமதித்தனர். அதுபோல சுவாமியின் வாக்குச் சாவடியில்செய்யாதது ஏன்.?
ஆளும் திமுக ஜனநாயகப் படுகொலையில் இறங்கியுள்ளது. கள்ள ஓட்டுக்கள் சரமாரியாகப் போடப்பட்டுள்ளஎன்றார் சந்திரலேகா.
சுவாமியாவது பரவாயில்லை. முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஓட்டையே கள்ள ஓட்டாகப் போட்டுஅவமானப்படுத்தியது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications