திமுக வெற்றி போலியானது: ஜெ. கருத்து
சென்னை:
மதுரை மத்திய தொகுதியில் திமுக பெற்றுள்ளது போலியான, செயற்கையான வெற்றிஎன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் முடிவு குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கை:மதுரை மத்திய தொகுதி தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். திமுக எல்லாவிதமானமுறைகேடுகளையும் நிகழ்த்தி செயற்கையான, போலியான வெற்றியை சாதித்துள்ளது.
இதை விட பெரிய தோல்விகளை அதிமுக சந்தித்துள்ளது. அதிலிருந்து மீண்டு வந்துமகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி நிரந்தரமானதல்ல. வெற்றியும்,தோல்வியும் நிரந்தரமானதல்ல.
பல தில்லுமுல்லுகளின் மூலம் இந்த வெற்றி பெற்றுள்ளது திமுக. இந்தத் தேர்தல்முடிவு மக்கள் எண்ணத்தின் உண்மையான பிரதிபலிப்பு அல்ல. மீண்டும் அதிமுகவுக்குவாய்ப்பு அமையும். அப்போது மக்கள் விருப்பப்படி அதிமுக ஆட்சி மலரும். இதுநிச்சயம் நடக்கும்.
எனவே அதிமுக தொண்டர்கள் தொய்வின்றி எப்போதும் போல கட்சிப் பணியையும்,மக்கள் தொண்டையும் ஆற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications